இதான் ஹைலைடே! கருணாநிதியே உயிரோடு வந்தமாதிரி.. பேசி நெகிழ்ந்த ஸ்டாலின் -மதுரை கலைஞர் நூலகத்தில் வாவ்
மதுரை: இன்று திறக்கப்பட்டு உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில், மறைந்த முதலமைச்சர் கருணாநிதியுடன் அமர்ந்து பேசுவதை போன்று அமைக்கப்பட்டு உள்ள தொழில்நுட்பம் அனைவரையும் வியப்படைய செய்து உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்த பிறகு மதுரையில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பெயரில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக மதுரையில் ரூ.206 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தில் நூலகம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

துரிதமாக நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நூலகம் என இதற்கு பெயர் வைக்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 17 ஆம் தேதி இந்த நூலகம் திறந்து வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அதை தொடர்ந்து இன்று மதுரை வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலை 5 மணியளவில் புதிய நூலகத்தை திறந்து வைத்தார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு, அமைச்சர்கள், எவ வேலு, பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதேபோல், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும் பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் ஐ லியோனி, பிரபல தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். அதேபோல் கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு முன் வைக்கப்பட்டு இருக்கும் கருணாநிதியின் சிலையையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள சிறுவர்களுக்கான பகுதியில் இருந்து சிறுவர்களிடம் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்துரையாடினார். உலகின் முன்னணி நூலகங்களுக்கே சவால் விடும் வகையில் பலதுறைகளை சேர்ந்த லட்சக்கணக்கான நூல்களை கொண்ட மிக பிரமாண்டமான இந்த நூலகத்தில் கூடுதலாக பல்வேறு வசதிகள் நவீன தொழில்நுட்பத்துடன் ஏற்படுத்தபடுத்தப்பட்டு உள்ளன.
அதில் குறிப்பாக மறைந்த முதலமைச்சர் கருணாநிதியுடன் அமர்ந்து நேரில் தத்ரூபமாக பேசும் வகையிலான புதிய தொழில்நுட்பம் அங்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் அமர்ந்து கருணாநிதியுடன் அமர்ந்து பேசி நெகிழந்தனர்.
அங்குள்ள சோபாவில் அமர்வதன் மூலம், அதற்கு அருகே உள்ள தொலைக்காட்சியில் கருணாநிதியுடன் அமர்ந்து பேசுவதை போல் இருக்கும். அதில் கருணாநிதி கலை அசைத்து சகஜமாக அமர்ந்து பேசுவதைபோல் உள்ளது. குறிப்பாக துரைமுருகன் இயல்பாக கை நீட்டின் கருணாநிதியுடன் சிரித்துப்பேசி மகிழ்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரை நெகிழ வைத்து இருக்கிறது.
-
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
மதுரையில் வேலை.. சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 127 பணியிடங்கள்! 12 ஆம் வகுப்பு தகுதி தான்! -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications