3D தரை.. குழந்தையாகவே மாறிய ஸ்டாலின்! கால் வைத்தவுடன் கொடுத்த ரியாக்ஷன் - கலைஞர் நூலகத்தில் அசத்தல்
மதுரை: இன்று திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் இடம்பெற்று உள்ளா 3டி தரையில் கால் வைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் பூரித்துப்போனார். என்ன அது?
தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியமைத்த உடன், முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி பெயரில் மதுரையில் நூலகம் அமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மதுரை புதுநத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை கட்டிட வளாகத்தில் நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

ரூ.114 கோடி செலவில் நூலக கட்டிடம் கட்டப்பட்டு புத்தகம், உள்கட்டமைப்பு, அறைகலன்கள் என ரூ.218 கோடி மதிப்பீட்டில் ஒரே ஆண்டில் இந்த நூலகம் தயாரானது. இந்த கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி வைத்தார். 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 8 தளங்களை கொண்ட இந்த நூலக கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.
தமிழ், ஆங்கில மொழி நூல்கள், மத்திய, மாநில அரசு, வரலாறு, கணினி, தொழில்நுட்பம், அறிவியல், சட்டம், இலக்கியம், கலை, விண்வெளி, புவியியல், போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த புத்தகங்கள் இந்த நூலகத்தில் இடம்பெற இருக்கின்றன.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையிலான நூல்கள் வீட்டில் பயன்படுத்துவதற்காகவும் வழங்கப்பட இருக்கிறது. அதேபோல் இந்த நூலகம் குறிப்புதவி செய்வதற்காகவும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில் கருணாநிதியின் படைப்புகளுக்காகவே ஒரு தனியான பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அது தவிர ஆய்வாளர்களுக்காக ஒரு பிரிவு, அரிய நூல்களுக்காக ஒரு பிரிவு எனப் பல பிரிவுகள், தவிர போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காகவே ஒரு பிரிவு, பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு பிரிவு, குழந்தைகள் பயன்பாட்டுக்காக ஒரு பிரிவு, நாளிதழ்கள் மற்றும் வார, மாத இதழ்களைப் படிப்பதற்காக ஒரு பிரிவு என அமைக்கப்பட்டு உள்ளது.

குழந்தைகளை நூலகத்திற்கு வரவழைக்கும் முயற்சியாக பல்வேறு சிறப்பம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதில் முக்கியமாக தமிழ் எழுத்துக்கள் வடிவிலான இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் திரை கொண்ட அரங்கமும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்தையும் கடந்து ஸ்டாலின் உட்பட அனைவரையும் வியக்க வைத்த ஒரு அம்சமும் உள்ளது.
அதுதான் 3டி தரை. மிண்ணும் ஒளியுடன் அமைக்கப்பட்டு உள்ள அந்த 3டி தரையில் கால் வைத்து மாணவ மாணவிகள் மகிழ்ந்தனர். அப்போது அதை பார்த்த முதலமைச்சர் முக ஸ்டாலின் அன்பில் மகேஷிடன் நானும் கால் வைக்கலாமா என்று கேட்டு கால் வைத்தார். உடனே 3டி தரையில் நகர்வதைபோல் இருந்ததை கண்டு முதலமைச்சர் ஸ்டாலின் பூரித்தார்.
-
போலீஸே உடலை அடக்கம் பண்ணிடும்! ஆகாஷ் வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை! விடாப்பிடியாய் பெற்றோர்! பரபர -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
மதுரையில் வேலை.. சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 127 பணியிடங்கள்! 12 ஆம் வகுப்பு தகுதி தான்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications