Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருணாநிதி அரசு vs ஸ்டாலின் அரசு.. இதான் வித்தியாசம்! கிறிஸ்தவ மக்களிடம் மனம் திறந்த முதலமைச்சர்

'சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம்' என்பது கருணாநிதியின் அரசு, 'சொல்வதையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம்' என்பது தன் அரசு என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: 'சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம்' என்பது கருணாநிதியின் அரசு, என்று தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய திராவிட மாடல் அரசு 'சொல்வதையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம்' என இயங்குவதாக கூறி உள்ளார். பணி செய்து கிடப்பதே தன்னுடைய கடன் என அவர் தெரிவித்து உள்ளார்.

மதுரையில் நடைபெற்ற பெந்தெகொஸ்தே திருச்சபைகளின் நான்காவது மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "பெந்தெகொஸ்தே திருச்சபைகளின் நான்காவது மாநாட்டில் மதுரைக்கு வந்து நேரில் கலந்து கொள்ள விரும்பினேன். ஆனாலும், பல்வேறு அரசு பணிகள் இருந்த காரணத்தால் நேரில் கலந்துகொள்ள இயலாத நிலை ஏற்பட்டது.

மகிழ்ச்சியடைகிறேன்

மகிழ்ச்சியடைகிறேன்

இருந்தாலும், காணொலியிலாவது நீங்கள் கலந்து பேசியாக வேண்டும் என்று கிறித்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் - என்னுடைய இனிய நண்பர். சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்டார்கள். அதனடிப்படையில், காணொலி மூலமாக நான் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்!

நான் உங்களில் ஒருவன்

நான் உங்களில் ஒருவன்

மதுரைக்கே வந்தாலும் சென்னையில் இருந்தபடியே பேசினாலும், என்றும் உங்களோடு இருப்பவன். உங்களில் ஒருவன் நான் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எனக்கும் உங்களுக்கும் இடையே தூரம் அதிகமாக இருந்தாலும், அன்பு நம்மை இணைக்கிறது. நம்பிக்கை நம்மை இணைக்கிறது. இயேசு கிறிஸ்து இந்த மனித குலத்துக்குக் கற்றுத்தந்த மதிப்பீடுகளை வரிசைப்படுத்தினால் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, இரக்கம், நீதி, தியாகம், பகிர்தல் ஆகியவற்றைத்தான் சொல்ல முடியும்.

இயேசு கற்றுத்தந்த சமத்துவம்

இயேசு கற்றுத்தந்த சமத்துவம்

மனிதர்கள் அனைவரும் சமம்' என்பது தான் சமத்துவம். யாரையும் வேற்றுமையாகப் பார்க்காதே' என்பது தான் சகோதரத்துவம். 'அனைவருடனும் சேர்ந்து வாழ்' என்பது தான் ஒற்றுமை. ஏழைகள் மீது கருணை காட்டு' என்பதுதான் இரக்கம், 'அநீதிக்கு எதிராக குரல் கொடு' என்பதுதான் நீதி. மற்றவர்களுக்காக வாதாடு' என்பதுதான் தியாகம். 'உன்னிடம் இருப்பதை இல்லாதவருக்கு கொடு' என்பதுதான் பகிர்தல்.

கிறிஸ்தவம் என்ன சொல்கிறது?

கிறிஸ்தவம் என்ன சொல்கிறது?

இதைத் தான் கிறிஸ்தவம் சொல்கிறது. இத்தகைய குணங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்தால், அதுதான் சமத்துவ நாடாக அமையும்! இந்திய நாட்டினுடைய 74-ஆவது குடியரசு நாளை முன்னிட்டு உரையாற்றிய மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பற்றித்தான் அதிகமாகப் பேசி இருக்கிறார்.

 மனிதம் இனைக்கிறது

மனிதம் இனைக்கிறது

இத்தகைய பன்முகத்தன்மைதான் இந்திய நாட்டை மட்டுமல்ல. நாட்டு மக்களின் பண்பாட்டையும் காக்கும். மொழிகள் வேறாக இருந்தாலும் இணைப்பது மனிதம். மதங்கள் - இனங்கள் வேறு. அத்தகைய மனிதக் கூறுகளை பின்பற்றுபவர்களாக மானுடம் திகழ வேண்டும். நாமும் வளர வேண்டும். நம்மைச் சுற்றி இருப்பவர்களும் வளர வேண்டும்.

திராவிட மாடல்

திராவிட மாடல்

வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் காலம் காலமாக நாம் பின்பற்றி வரக்கூடிய தமிழர் பண்பாடு! அனைவரையும் இணைக்கும் ஆற்றல் மொழிக்கு உண்டு!அந்த வகையில், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைத்தான் நமது அரசு தனது நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தி வருகிறது என்பதை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். 'எல்லார்க்கும் எல்லாம்' என்பதே திராவிட மாடல் ஆட்சியினுடைய அடிப்படை நோக்கம்!

 தமிழ்நாடு முதன்மை மாநிலம்

தமிழ்நாடு முதன்மை மாநிலம்

கடந்த ஓராண்டு காலத்தில் கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, வேளாண்மை, மகளிர் மேம்பாடு, குழந்தைகள் நலன், விளிம்பும் நிலை மக்களின் நலன், சிறுபான்மையினர் நலன், பட்டியலின, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உரிமைகள், விளையாட்டு, சுற்றுலா, தொழிலாளர்கள் நலன், நகர்ப்புற வளர்ச்சி, கிராமப்புற மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் என அனைத்திலும் கவனம் செலுத்தி தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கும் பணிகளைச் செய்து வருகிறோம் என்பதை நீங்கள் எல்லாம் நன்றாக அறிவீர்கள்.

 கிறிஸ்தவ மக்களுக்கு ஏராளமான நண்மை

கிறிஸ்தவ மக்களுக்கு ஏராளமான நண்மை

குறிப்பாக, கிறித்துவ சமுதாய மக்களுக்கு ஏராளமான நன்மைகளை கழக அரசு செய்து கொடுத்துள்ளது. தேவாலயங்களைச் சீரமைக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உபதேசியார் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தருவதற்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு திட்டங்கள்

பல்வேறு திட்டங்கள்

சிறுபான்மையினர் பள்ளிகளுக்கான அனுமதிக்காக மைனாரிட்டி ஸ்டேட்டஸ் சர்டிபிகேட் இணையத்தின் மூலம் பெறுவதை எளிமையாக ஆக்கி இருக்கிறோம். சிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவியர்க்கு சிறுபான்மையினர் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவு வழங்கப்பட இருக்கிறது. சிறுபான்மையினர் அதிகம் வசிக்கக்கூடிய மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் அலுவலகம் அமைக்கப்பட இருக்கிறது.

ஜெருசலேமுக்கு புனித பயணம்

ஜெருசலேமுக்கு புனித பயணம்

கரூர், மதுரை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு கிறிஸ்தவ உதவி சங்கம் கூடுதலாக துவங்கிட நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமுக்கு புனித பயணம் செல்வதற்கு அருட்சகோதரிகள். கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் அதிக கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கோரிக்கை வைக்காமலேயே நிறைவேற்றுவோம்

கோரிக்கை வைக்காமலேயே நிறைவேற்றுவோம்

இவை அனைத்தும் கிறித்துவ சமூக மக்களுக்கு கடந்த இருபது மாத காலத்தில் செய்து தரப்பட்டுள்ள நலத் திட்டங்கள்! கழக அரசைப் பொறுத்தரையில் நீங்கள் கோரிக்கை வைத்துத்தான் நாங்கள் நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை இல்லை. நாங்களாகவே பல்வேறு திட்டங்களை, நீங்கள் கோரிக்கை வைக்காமலேயே நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.

 சொல்லாததையும் செய்வோம்

சொல்லாததையும் செய்வோம்

'சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம்' என்பது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அரசு. எனது, நமது திராவிட மாடல் தலைமையிலான அரசு 'சொல்வதையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம்' என்று இயங்கக்கூடிய அரசு! இங்கே பேராயர் எடிசன் அவர்களால் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

என் கடன் பணி செய்து கிடப்பதே

என் கடன் பணி செய்து கிடப்பதே

இதற்கு முன்னால் நம்முடைய இனிகோ இருதயராஜ் அவர்களும் என்னிடத்தில் தேதி பெறுகிற நேரத்திலேயே அதுபற்றியெல்லாம் விளக்கமாக சொல்லியிருக்கிறார்கள். அது பற்றி நிச்சயம் ஆலோசனை செய்து, நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றித் தருவோம் என நான் உறுதி அளிக்கிறேன். அரசையும், என்னையும் பாராட்டி நீங்கள் பேசிய சொற்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன. 'என் கடன் பணி செய்து கிடப்பதே.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+