எடப்பாடி ஒழிக! மதுரையில் திரண்ட முக்குலத்தோர் கழகத்தினர்! அதிமுக பொன்விழா மாநாட்டுக்கு எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் நடைபெறும் அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து முக்குலத்தோர் தேசிய கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் முழுமையாக ஒரு வருடம் கூட இல்லை. எனவே அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரங்களை தொடங்கியுள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை பொறுத்த அளவில் தென் மாவட்டங்களில் தன்னை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தோல்வியை சந்தித்த பின்னர் கட்சி மீதான நம்பிக்கை தொண்டர்களிடையே சரிய தொடங்கியிருக்கிறது.

Mukkulathor desiya kalagam protest against the AIADMK conference to be held in Madurai tomorrow

எனவே எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான இடங்களை வெல்ல எடப்பாடி தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். அதன்படி எடப்பாடி என்றாலே கொங்கு மண்டலம்தான் எனும் பிம்பத்தை உடைக்கவும், தென் மண்டலத்தில் தனது பவரை காட்டவும் நாளை மதுரையில் அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டை நடத்த இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தென் மண்டலத்தை பொறுத்த அளவில் மதுரை தொடங்கி கன்னியாகுமரி வரை 10 மாவட்டங்கள் இருக்கின்றன.

இதில் மாவட்டத்திற்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஓரணியாக இருந்த போதே தென் மண்டலத்தில் மொத்தமுள்ள 10 எம்.பி தொகுதிகளில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேபோல அதற்கு பின்னர் நடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் மொத்தமிருந்த 58 தென் மண்டல எம்எல்ஏ சீட்களில் அதிமுக கூட்டணி 15 இடங்களை மட்டுமே வென்றது. அப்போதும் அதிமுக ஒரே அணியாகதான் இருந்தது.

Mukkulathor desiya kalagam protest against the AIADMK conference to be held in Madurai tomorrow

ஆனால் தற்போது அதிமுகவிலிருந்து ஓ.பி.எஸ் பிரிந்திருக்கிறார். டிடிவி தினகரனும் ஓபிஎஸ்-ம் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். தென் மண்டலத்தை பொறுத்த அளவில் எடப்பாடி தரப்பை விட ஓபிஎஸ் மற்றும் டிடிவி, சசிகலா தரப்பிற்குதான் அதிக வாக்கு வங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இதனை மாற்றவும், முக்குலத்தோர் வாக்கு வங்கியை தனது பக்கம் திருப்பவும் இந்த மாநாட்டை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டிருக்கிறார்.

ஆனால் ஒபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தரப்பினர் இந்த மாநாட்டிற்கு தங்களது ஆதரவாளர்கள் யாரும் போகக்கூடாது என்று வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதவரை எடப்பாடி பழனிசாமி முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்களை யாரையும் தன்னுடன் வைத்துக்கொண்டது கிடையாது. எனவே அவர்களை நம்பி சென்றால் ஏமாற்றதான்படுவீர்கள் என்று இந்த வாய்மொழி உத்தரவில் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Mukkulathor desiya kalagam protest against the AIADMK conference to be held in Madurai tomorrow

இந்நிலையில் நளை நடைபெற உள்ள பொன்விழா மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து முக்குலத்தோர் தேசிய கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் முக்குலத்தோர் சமுதாயத்தை புறக்கணித்ததாக கூறி மதுரை முனிச்சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர். எந்த சமூகத்தின் வாக்கு வங்கியை கவர மாநாடு நடத்த திட்டமிடப்பட்டோ அந்த சமூகத்தை சேர்ந்தவர்களே தற்போது போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது எடப்படிக்கு லேசான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+