திருமாவளவன் கருத்தரங்கிற்குள் கத்தியுடன் நுழைந்த நபர்.. ஒரே பரபரப்பு.. போலீஸ் விசாரணை
திருமாவளவன் கூட்டத்தில் கத்தியுடன் நுழைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது
மதுரை: திருமாவளவன் கலந்து கொண்ட கூட்டத்தில் ஒருவர் கத்தியுடன் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடந்த 17ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், பல்வேறு கருத்தரங்குகளுக்கு அக்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மதுரை அருகே சிக்கந்தர்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிறந்தநாள் கருத்தரங்கு நடைபெற்றது.. இந்த கூட்டத்திற்கு திருமாவளவன் தலைமை தாங்கினார்.. கருத்தரங்கம் நடந்து கொண்டே இருந்தபோது திடீரென ஒரு மர்ம நபர் கத்தியுடன் உள்ளே நுழைந்ததால், அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுவிட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தொண்டர்கள், அந்த நபரை உடனே சுற்றிவளைத்து மடக்கி பிடித்து தர்ம அடி தந்துள்ளனர்.. பிறகு போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்ததையடுத்து, நடந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, அந்நபரிடம் தீவிர விசாரணையை போலீசாரும் மேற்கொண்டனர்.
அந்த நபர் யார்? எதற்காக கத்தி எடுத்து கொண்டு கருத்தரங்குக்கு வந்தார்? இவரை யாராவது அனுப்பி வைத்துள்ளனரா? அவரது பின்புலம் என்ன? என்ற கோணங்களில் விசாரணையை துவங்கினர்.. அந்த நபர் சோழவந்தானை சேர்ந்த மாரீஸ்வரன் என்பதும் 28 வயதாகிறது என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது..
ஆனால், அவர் எந்த அமைப்பை சேர்ந்தவர், எதற்காக கத்தியுடன் நிகழ்ச்சிக்கு வந்தார் என்பது குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், அப்பகுதியில் பரபரப்பு இன்னமும் நீங்கவேயில்லை. கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்புள்ளதாக முக்கிய குற்றவாளியான சயன் தெரிவித்ததாக வெளியான தகவலால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றி கொண்டது.












Click it and Unblock the Notifications