‘ஓ.பன்னீர்செல்வத்துக்கு செல்வாக்கு இருக்கிறது’ - நயினார் நாகேந்திரன் ஓப்பன் டாக்
மதுரை: சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடித்து எப்படியாவது ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் மதுரை வந்திருந்தார். திமுகவும் தென் மாவட்ட அரசியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது, சசிகலா புதிய கட்சி ஆகியவற்றால் தென் மண்டல அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது. பன்னீர்செல்வத்துக்கு நெருக்கம் இருக்கிறது. ஆனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவி வருகிறது [Nainar Nagendran].

திருப்பரங்குன்றம் கோயில்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மதுரை தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு வெற்றி பெற்றுள்ளது. அதற்காகவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும் திருப்பரங்குன்றத்தில் வழிபாடு செய்துள்ளேன். திருப்பரங்குன்றம் பற்றிய நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காக உயிர் நீத்த பூரண சந்திரன் மனைவிக்கு மத்திய, மாநில அரசுகள் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் பக்தி மேலோங்கி கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியின் வருகைக்கு பிறகு திருப்பரங்குன்றம் கோயிலுக்கு அதிக கூட்டம் வந்திருப்பது வரவேற்க வேண்டும்.
ஓபிஎஸ் செல்வாக்கு
மாநிலம் செழித்து மக்களுக்கு நல்ல ஆட்சி வழங்க வேண்டும் என்று வழிபாடு செய்துள்ளேன். உடனடியாக திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். மதுரை எய்ம்ஸ் பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டது. மீதமுள்ள 20 சதவீதம் பணிகள் முடிந்து, தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணி வெற்றி பெற்று எங்கள் ஆட்சி அமைந்தவுடன் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும்.
தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இன்னும் 2 - 3 நாட்களில் தெரிந்துவிடும். தென் மாவட்டங்களில் நாங்கள் எல்லாம் இருக்கிறோம். அதனால் ஓ. பன்னீர்செல்வம் சொல்வதை போல பாதிப்பு எதுவும் ஏற்படாது. எந்த மாவட்டத்திலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு செல்வாக்கு உள்ளது. ஓபிஎஸ்க்கு செல்வாக்கு இல்லை என்று நான் சொல்லவில்லை.
பாதிப்பு இல்லை
அவருக்கும் செல்வாக்கு உள்ளது. அதேபோல ஒவ்வொரு கட்சிக்கும், ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. தேர்தல் சூழ்நிலைகளை பொறுத்துதான் வெற்றி வாய்ப்பு அமையும். கிரிவல பாதையில் இருப்பதால் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. நல்லதே நடக்கும். அதிமுக வாக்கு வங்கிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது" என்றார்.












Click it and Unblock the Notifications