நியோமேக்ஸ் மோசடி.. குவியும் புகார்களுக்கு இடையே மேலும் 2 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!
மதுரை: நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி தொடர்பாக பல்வேறு மாவட்ட மக்கள் ஆதாரங்களுடன் புகார் அளித்து வரும் நிலையில், இந்த வழக்கில் மேலும் 2 பேருக்கு ஜாமின் வழங்கி மதுரை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை தலைமையிடமாக கொண்டு நியோமேக்ஸ் பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு பாளையங்கோட்டை, கோவில்பட்டி, திருச்சி, தஞ்சை என பல மாவட்டங்களில் அலுவலகங்கள் செயல்பட்டன. இந்த நிதி நிறுவனத்தின் இயக்குநர்களாக வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதம் 12% முதல் 30% வரை வட்டி தருவதாகவும், இரண்டரை முதல் 3 ஆண்டுகளில் முதலீடு செய்த பணம் இரட்டிப்பாக தரப்படும் எனக் ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை ஈர்த்தனர். இதை நம்பி பலர் பல கோடிக்கு முதலீடுகளை செய்துள்ளனர். ஆனால் கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.
புகார்களின் அடிப்படையில் 17 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் 10 கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்களான பாலசுப்ரமணியன், பழனிசாமி, அசோக் மேத்தா, சார்லஸ் கிளோமேக்ஸ் , தியாகராஜன், கமலகண்ணன், நாராயணசாமி, மணிவண்ணன் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நியோமேக்ஸ் இயக்குநர்களான சைமன் ராஜா, கபில் ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பொருளாதாரம் குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதி, கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். தினமும் காலை 10 மணிக்கு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், தலா ஒரு லட்ச ரூபாய் பிணைத்தொகை செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே, நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்காக பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி முன்னிலையில் மதுரையில் சிறப்பு முகாம் நடைபெற்று வந்தது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் வந்து புகார் அளித்தனர்.
இந்நிலையில், நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மதுரை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றம், நியோமேக்ஸ் நிறுவன நிர்வாகிகள் இசக்கிமுத்து, சகாயராஜ் ஆகிய 2 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications