காரில் உல்லாசம்.. மாணவிகளையும் விடல.. தண்டனையை எதிர்த்து நிர்மலாதேவி அப்பீல்.. மதுரை கோர்ட் அதிரடி
மதுரை: உதவி பேராசிரியை நிர்மலாதேவி மீதான கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச்சென்ற வழக்கில். பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர் விடுதலையானதை எதிர்த்து சிபிசிஐடி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு என்ன?
கடந்த 2016ம் ஆண்டு, பேராசிரியை நிர்மலா தேவி வழக்கானது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.. தமிழகமெங்கும் அதிர்ச்சியையும், சலசலப்பையும், விமர்சனங்களையும் உண்டுபண்ணிய வழக்கு இதுவாகும்.

தனியார் கல்லூரியின் பேராசிரியரான நிர்மலாதேவி, தன்னிடம் பயின்ற கல்லூரி மாணவிகளை, தவறான பாதைக்கு அழைத்து சென்றதுதான், இவர்மீது வைக்கப்பட்ட முதன்மையான குற்றச்சாட்டாகும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்த முயன்றபோதுதான், அவரது தனிப்பட்ட விவகாரங்கள் பூதாகரமாக வெடித்து கிளம்பியது.
பரபரப்பை கிளப்பிய வாக்குமூலம்
குறிப்பாக, 2011ம் ஆண்டு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவருடன் தான் உல்லாசம் அனுபவித்ததாகவும், 2016-ல் தேவாங்கர் கல்லூரியின் முன்னாள் செயலாளருடன் உல்லாசம் அனுபவித்ததாகவும், பிறகு கணவரின் நண்பர்கள் 2 பேருடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுடனும் நெருக்கமாக இருந்ததாகவும் நிர்மலாதேவி கூறியிருந்தார்.
அதுமட்டுமல்ல, மற்றொரு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி, நகைக்கடை அதிபர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக அலுவலக அதிகாரி, எஸ்பிகே கல்லூரி உதவி பேராசிரியர், உதவி பேராசிரியர் முருகன் போன்றோருடன் படுக்கையை பகிர்ந்ததாகவும், கருப்பசாமியுடன் காரில் அருப்புக்கோட்டை சென்றபோது, காரை ஓரமாக நிறுத்திவிட்டு காருக்குள்ளேயே உல்லாசம் அனுபவித்ததாகவும் நிர்மலா தேவி, சிபிசிஐடி போலீசாரிடம் தந்திருந்த வாக்குமூலத்தில் கூறியிருந்ததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதெல்லாம் நிர்மலா தேவியின் தனிப்பட்ட விவகாரம் என்றாலும், கல்வி பயிலும் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்திருந்ததுதான் பகீர் குற்றச்சாட்டாக கிளம்பியது..
பரபரப்பை கிளப்பிய ஆடியோ
இந்த விவகாரம் தொடர்பாக வெளியாகியிருந்த ஆடியோ ஒன்றில், மாணவிகளிடம் பாலியல் பேரம் குறித்தும், அப்போதைய தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் குறித்தும் நிர்மலா தேவி, பேசியிருந்தார்.. இந்த விவகாரம் பூதாகரமாக கிளம்பியதே இந்த புள்ளியிலிருந்துதான்..
விஐபிக்களுக்கு மாணவிகளை சப்ளை செய்வது தொடர்பாக மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, நிர்மலாதேவி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று, இறுதியில் 3 பேருமே மாட்டிக்கொண்டு கம்பி எண்ணும் நிலைமைக்கு ஆளானார்கள்.
அப்பீலுக்கு போன நிர்மலாதேவி
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம், நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் அபராதம் விதித்தும், பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்தும் உத்தரவிட்டிருந்தது.. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி நிர்மலாதேவி உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
அதில், "வழக்கு தொடர்பாக 82 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். ஆனால், சாட்சிகளின் அடிப்படையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதாக தெரியவில்லை. மாறாக வழக்கு முழுவதுமே வீடியோ விசாரணை போலவே இருந்தது. சாட்சிகள் முழுமையாக கவனிக்கப்படவில்லை. இதைக் கருத்தில் கொள்ளாமல் கீழமை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. எனவே, தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அதுவரை தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க வேண்டும்" என கூறியிருந்தார்.
பிப்ரவரி 25ம் தேதிக்கு தள்ளிவைப்பு
நிர்மலாதேவியின் இந்த மனுவானது நீதிபதி பி.புகழேந்தி முன்பு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது.. அப்போது அரசு தரப்பில், "இந்த வழக்கில் முருகன், கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிசிஐடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு நிலுவையில் உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த மேல்முறையீட்டு மனுவுடன் நிர்மலாதேவி மேல்முறையீட்டு மனுவையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு, இந்த விசாரணையை வரும் பிப்ரவரி 25-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications