Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிர்மலா சீதாராமனை வரவேற்ற பிடிஆரின் தாய்! மதுரை மீனாட்சி கோவிலில் நடந்த சம்பவம்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்ற நிர்மலா சீதாராமனை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி வரவேற்றார். நிர்மலா சீதாராமனுக்கு மாலை அணிவித்து அவர் கோவிலுக்கு வரவேற்ற நிலையில் அதன் பின்னணி பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக இருப்பவர் நிர்மலா சீதாராமன். இவர் மதுரையில் பிறந்தவர். இதனால் அடிக்கடி மதுரைக்கு வந்து செல்கிறார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை கூட மதுரையில் நடத்தும் திட்டத்தை அவர் வைத்துள்ளார்.

nirmala-sitharaman-visiss-madurai-meenakshi-temple-and-minister-ptr-palanivel-thiagarajans-mother-w

இந்நிலையில் தான் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மற்றும் மதுரை மாவட்ட பாஜக தலைவர்கள் சென்றனர்.

இப்போது இணையதளங்களில் ஒரு போட்டோ வெளியாகி கவனத்தை ஏற்படுத்தி உள்ளது. அது என்னவென்றால் கோவிலும் சென்ற நிர்மலா சீதாராமனை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாய் ருக்மணி வரவேற்றது தான். நிர்மலா சீதாராமனுக்கு அவர் மாலை அணிவித்து கோவிலுக்கு வரவேற்றார். அதன்பிறகு அவரை கோவிலுக்குள் அழைத்து சென்றார்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுகவை சேர்ந்தவர். முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த அவர் தற்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். இப்படியான சூழலில் தான் அவரது தாய் ருக்மணி, நிர்மலா சீதாராமனை வரவேற்றது கவனம் பெற்றது. இதுபற்றி சிலர் அரசியல் ரீதியிலான கேள்வியையும், சந்தேகத்தையும் எழுப்பி உள்ளனர்.

ஆனால் உண்மையில் இந்த வரவேற்பின் பின்னணியில் எந்த அரசியல் கேள்விகளுக்கும் இடம் வேண்டாம். ஏனென்றால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாய் ருக்மணி, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முக்கிய பொறுப்பில் உள்ளார். 83 வயது நிரம்பிய ருக்மணி தற்போது மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் இந்த பொறுப்புக்கு கடந்த ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.

கோவில் அறங்காவலர் குழு தலைவராக ருக்மணி இருப்பதால் அங்கு வரும் பிரபலங்களை கோவில் சார்பில் வரவேற்பது வழக்கம். அந்த வகையில் தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் வரவேற்றுள்ளார். அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு ருக்மணி நினைவு பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+