"நான்தான் மதுரையின் புதிய ஆதீனம்.. பதவி ஏற்றுவிட்டேன்".. புயலை கிளப்பும் நித்யானந்தா.. பின்னணி!
மதுரை: மதுரையின் 293வது ஆதீனமாக தான் பதவி ஏற்றுக்கொண்டதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். இவரின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில போலீசார் மூலம் நித்யானந்தா தேடப்பட்டு வருகிறார். அடுக்கடுக்காக பல்வேறு புகார்கள் இவர் மீது வைக்கப்பட்டுள்ளதால் இவரை இந்தியா கொண்டு வரும் முடிவிலும் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக இவர் அறிவித்துள்ளார்.
இதற்கான தனி நாணயம், கொடி உள்ளிட்டவற்றை கூட இவர் வெளியிட்டு இருந்தார். அதோடு கைலாசாவில் இருந்து ஆன்மீக வீடியோக்களையும் கூட இவர் வெளியிட்டு வருகிறார். இந்தியாவில் இருந்து இவர் தப்பி ஓடிய நிலையில் இவரின் சரியான இருப்பிடம் இன்னும் வெளியே வரவில்லை. இவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து இன்னும் முழுமையான விவரம் வெளியாகவில்லை.

தேடல்
பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதால். இவரை இந்தியா கொண்டு வர வேண்டும் என்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது மதுரையின் 293வது ஆதீனமாக பதவி ஏற்றுக்கொண்டதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். மதுரை ஆதீனம் மடத்தில் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் கடந்த 13-ந்தேதி உயிரிழந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் 3 நாட்களுக்கு முன் பலியானார்.

தேர்வு
கடந்த 40 வருடமாக இவர் ஆதீனமாக இருந்தார் இதையடுத்து விதிப்படி அவர் இளைய பீடாதிபதியாக அறிவித்த நபர்தான் புதிய ஆதீனமாக நியமிக்கப்பட வேண்டும். அதன்படி 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பதவியேற்றுக்கொண்டார். இவர் அருணகிரிநாதர் மூலம் இளைய பீடாதிபதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய ஆதீனமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஆனால்
ஆனால் நித்யானந்தா தன்னை ஆதீனம் என்று கூறிக் கொண்டு 293-வது ஆதீனமாக தான் பதவி ஏற்று கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 2012-ம் ஆண்டு நித்யானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பு விமர்சனங்களை சந்தித்தது. இது சர்ச்சையில் முடிந்தது. இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடும் ஏற்பட்டது. இதையடுத்து இந்த அறிவிப்பை அருணகிரிநாதர் திரும்ப பெற்றார்.

இல்லை
இதனால் விதிப்படி இனி நித்யானந்தா இளைய பீடாதிபதி கிடையாது என்று அருணகிரிதர் முன்பு தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது அவரின் மறைவையொட்டி தான்தான் புதிய ஆதீனம் என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். மேலும் இனி தன்னுடைய பெயர் ஜெகத்குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் என்றும் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.

கைலாசா
ஏற்கனவே கைலாஸா நாட்டின் அதிபராக இவர் தன்னை அறிவித்து உள்ளார். தனது நாட்டிற்கு என்று தனி சட்ட திட்டங்களை இவர் அறிவித்து அங்கு ஆட்சி நடத்தி வருகிறார். இவருக்கு எதிராக இந்தியாவில் சில இடங்களில் புகார்கள் உள்ள நிலையில் தன்னை புதிய மதுரை ஆதீனமாகவும் இவர் தன்னை அறிவித்துக்கொண்டு இருக்கிறார். முக்கியமாக மதுரைக்கு வராமலே ஆன்லைன் மூலம் பதவி ஏற்றுக்கொண்டதாக இவர் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications