அதிமுக மாநாடு! புளி சாதம் எப்படியிருந்தது? போகிற போக்கில் பங்கமாய் கலாய்த்த ஓ.பன்னீர்செல்வம்!
மதுரை: மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு எப்படியிருந்தது என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, அதில் போட்ட புளியோதரை எப்படி இருந்தது என எதிர்கேள்வி கேட்டார் ஓ.பன்னீர்செல்வம்.
அதற்கு புளியோதரை நல்லாயில்லை என கூட்டத்தில் ஒருவர் கூற, ''ம்ம்.. அது போல் தான் மாநாடும்'' என பங்கமாய் கலாய்த்துவிட்டு விமான நிலையத்திற்குள் சென்றார். புளியோதரை சாப்பிட முடியாதபடி வாடை எடுத்து குப்பையில் கொட்டப்பட்டதை போல் தான் அதிமுக மாநாடு என்பதை அவர் இப்படி நையாண்டி செய்திருக்கிறார்.

இதனிடையே தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லவுள்ளீர்களா என்ற கேள்விக்கு ஆம், இல்லை என்று பதில் சொல்லாமல் ஓ.பன்னிர்செல்வம் நழுவிக்கொண்டார். அதிமுக பொதுக்குழு தீர்ப்பு வந்த பிறகு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்ததால், அது பற்றி ஓ.பன்னீர்செல்வம் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்னும் கொஞ்ச நேரம் இங்கே நின்றால் அதிமுக பொதுக்குழு தீர்ப்பை பற்றி கேள்வி எழுப்பிவிடுவார்களோ என்ற ஐயத்தில் அவசர அவசரமாக விமான நிலையத்திற்குள் செல்வதிலேயே குறியாக இருந்தார். செய்தியாளர்கள் கேள்விக்கு நின்று பதில் சொல்லவில்லை.
மதுரை அதிமுக மாநாட்டை புளியோதரையுடன் ஒப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் கலாய்த்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு நாளை பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications