பிறந்து 7 நாட்களேயான குழந்தை கொலை.. பாட்டி கைது.. மீண்டும் ஒரு கருத்தம்மா?
மதுரை: பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை பாட்டி தனது கையால் முகத்தை மூடி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே பாறைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் சின்னச்சாமி - சிவப்பிரியா தம்பதி. இவர்களுக்கு 7 நாட்களுக்கு முன்னர் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாததால் நேற்று முன் தினம் நள்ளிரவு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றனர்.

குழந்தை இறப்பு
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். ஆனால் குழந்தையின் முகத்தில் காயங்கள் இருந்ததைக் கண்ட மருத்துவர்கள் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

பிரேத பரிசோதனை
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த வழக்கை சந்தேக மரணமாக பதிவு செய்தனர். பின்னர் விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனையின்படி மூச்சுத்திணறல் காரணமாக குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத நேரம்
பின்னர் உத்தப்பநாயகன்னூர் போலீஸார் குழந்தையின் பெற்றோர் சின்னச்சாமி- சிவப்பிரியாவிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையின் மூக்கை பிடித்து அழுத்தி தலையணை வைத்து அழுத்தியும் பாட்டி நாகம்மாள் கொலை செய்தது தெரியவந்தது.

பாட்டி நாகம்மாள் கைது
நாகம்மாள் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் பெற்றோருக்கும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. பெண் குழந்தை என்பதால் குழந்தை கொலை செய்யப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications