மதத்தின் பெயரில் மக்களை கொடூர கொலை செய்த பயங்கரவாதிகளை நாடு புகுந்து அடித்த மோடி - அமித்ஷா
மதுரை: ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு தமிழகத்தில் இருந்து பெரிய ஆதரவு கிடைத்தது. பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்களை மதத்தின் பெயரில் கொடூரமாக கொலை செய்த பயங்கரவாதிகளை அவகர்கள் நாட்டுக்குள் புகுந்து பிரதமர் மோடி அடித்தார்கள். இதுதான் அவர்களுக்கு நாம் புகட்டிய பாடம். இனியும் பயங்கரவாதிகள் தாக்கினால் அவர்களின் வீடு புகுந்து அடிப்போம் என்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
மதுரையில் பாஜக மாநில மாவட்ட மண்டல் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் முப்படைகள் நடத்திய ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை புகழ்ந்து பேசினார். இதுபற்றி அமித்ஷா கூறியதாவது:

இந்த நேரத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது என்னவென்றால் ‛ஆபரேஷன் சிந்தூர்'. நாட்டின் வடக்கில் நடந்த நடவடிக்கைக்கு மிகப்பெரிய எழுச்சியும், நாட்டு பற்றும், ஆதரவு குரலும் எழுந்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு தமிழகத்தில் இருந்து பெரிய ஆதரவு கிடைத்தது. பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்களை மதத்தின் பெயரில் கொடூரமாக கொலை செய்த பயங்கரவாதிகளை அவகர்கள் நாட்டுக்குள் புகுந்து பிரதமர் மோடி அடித்தார்கள். இதுதான் அவர்களுக்கு நாம் புகட்டிய பாடம்.
இதற்கு முன்பு கூட பயங்கரவாதிகள் தங்களின் கைவரிசகைளை காட்டி உள்ளனர். ஆனால் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இந்த மாதிரியான தாக்குதல்களை நடத்தவில்லை. ஆனால் புரிரி, புல்வாம், பஹல்காம் தாக்குதலுக்கு மோடி தலைமையில் மத்திய அரசு பதிலடி கொடுத்து முப்படைகளின் வீரத்தையும், தீரத்தையும் காட்டி உள்ளது.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் பதுங்கிய இடத்துக்கே சென்று தாக்குதல் நடத்தப்பட்டது. எல்லையில் இருந்து 100 கிலோமீட்டர் உள்ளே சென்று பயங்கரவாதிகளின் இடங்களை மண்ணோடு மண்ணாக்கியது நம் ராணுவம். ராணுவத்தில் தன்னிறைவான நிலை வருகிறது. ‛ஆபரேஷன் சிந்தூர்' வெற்றியை பற்றி எல்லாம் பேசி கொண்டிருக்கிறோம்.
இப்போது வான்வெளி சாதனையை பற்றி சொல்ல வேண்டும். ‛காவேரி இன்ஜின்' என்ற பெயரை இளைஞர்கள் உச்சரிக்க தொடங்கி உள்ளனர். பாகிஸ்தான் ட்ரோன், ஏவுகணைகளை அடித்து தூள்தூளாக்கி நம் நாட்டின் வான்வெளி வல்லமை நிரூபிக்கப்பட்டுள்ளது. ‛ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் முடியவில்லை என்று மோடி கூறியுள்ளார். மீண்டும் பயங்கரவாதிகள் தாக்கினால் அவர்களின் வீடு புகுந்து தாக்கி அழிக்கப்படுவார்கள் என்பதை நான் இந்த நேரத்தில் நினைவுட்டுகிறேன்.












Click it and Unblock the Notifications