தமிழகத்தை ஆளும் உரிமை அதிமுகவுக்கு மட்டுமே உண்டு.. ஓபிஎஸ் அதிரடி
Recommended Video
மதுரை: தமிழகத்தை ஆளும் உரிமை அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரை அண்ணா நகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி பொறுப்பில் இருந்த முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்தை தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் முத்துராமலிங்க தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் கையெழுத்திட்டு வங்கியில் இருந்து பசும்பொன்னுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பி வைத்தார்கள்.

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 112 வது ஜெயந்தி விழாவும் 57 வது குருபூஜையும் வரும் 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி நடைபெறுகின்றது. முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுக சார்பில் 4 கோடியே 50 இலட்சம் மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசம் மற்றும் கிரீடம் 2014 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் குரு பூஜை நாட்களை தவிர பிற நாட்களில் வங்கி பொறுப்பில் தங்க கவசம் லாக்கரில் வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக புதுப்பிக்கப்பட்ட வங்கி கிளையை தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
நிகழ்வில் அமைச்சர்கள், மதுரை ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் ஒ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறுகையில், அதிமுக மக்களின் நம்பிக்கையை பெற்றதே 2 தொகுதிகளில் வெற்றி பெற முக்கிக் காரணம். தமிழக அரசின் சாதனைகளை அடிப்படையாக கொண்டு மக்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த வெற்றி உதாரணம்.
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - திமுக சம அளவில் வாக்குகளை பெற்றுள்ளது. இதில் இருந்து தமிழகத்தை ஆளும் உரிமை அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது என நிரூபணம் ஆகியுள்ளது.
மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய 2 மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆளும் உரிமையை மக்களிடம் இருந்து பெற்றுள்ளது. நவம்பர் 30 ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்றார் அவர்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications