அதிமுகவை சமுதாய கட்சியாக மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.. தென் மாவட்டங்களில் ஆட்டத்தை தொடங்கிய ஓபிஎஸ்!

Subscribe to Oneindia Tamil

தென்காசி: அதிமுகவை ஒரு குறிப்பிட்ட சமுதாய கட்சியாக மாற்றிவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் பெயரை கூட சொல்ல விரும்பவில்லை என்று கூறிய ஓபிஎஸ், முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் பலன்கள் நேரடியாக மக்களுக்கு சென்று சேர்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திமுகவில் இணைந்துவிட்ட சூழலில், இன்று முதல் தென் மாவட்டங்களில் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். முதற்கட்டமாக தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் தொகுதி வாரியாக ஓபிஎஸ் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அந்த வகையில் இன்று தென்காசி மாவட்டம் இலஞ்சியில் திமுக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

OPS

இதில் ஓபிஎஸ் பேசுகையில், யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.. கட்சியை அபகரித்து நாடகமாடலாம்.. ஆனால் எந்த நோக்கத்திற்காக கட்சி உருவாக்கப்பட்டதோ, அதே நோக்கத்தில் நிலையாக நின்று சரித்திர சாதனையை நிகழ்த்தியவர் முதல்வர் ஸ்டாலின். மக்களுக்காக பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

முன்பிருந்த அரசுகள் திட்டங்களை அறிவித்துவிடுவார்கள்.. ஆனால் அந்த திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்று ஆய்வு செய்வதில்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக ஆட்சியின் பலன்களை மக்களுக்கு கிடைக்க செய்கிறார். தாய்மார்களுக்கு ரூ.5 ஆயிரத்தை அவர்களுக்கு தெரியாமலேயே வங்கி கணக்கில் செலுத்தினார். அந்த அளவுக்கு சாதனையை செய்து, திட்டங்களை செயல்படுத்துகிறார்.

எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் தவறான பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். கத்தி கத்தி பேசினால் மக்கள் கேட்பார்கள் என்று நினைக்கிறார். அவர் பெயரை கூட சொல்ல விரும்பவில்லை. ஊர்ந்து போய் பதவியை பெற்று, பதவி கொடுத்தவருக்கே நன்றி இல்லாமல் இருந்தவர். தேர்தலுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே தன்னை மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று சொல்ல சொன்னவர்.

ஆனால் மக்கள் ஏற்கவில்லை. அதிமுகவின் பொதுச்செயலாளராக தனக்குத் தானே மகுடம் சூட்டிக்கொண்டார். அவர் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் வந்த 10 தேர்தலிலும் அதிமுக தோல்வியடைந்தது. இப்போது அவர் அறிவிக்கும் வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை. அவர் சொல்வதெல்லாம் பொய் என்று மக்கள் அறிந்து கொண்டார்கள்.

தமிழ்நாட்டில் நன்றி மறந்தவர்களுக்கு எந்தக் காலத்திலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். உண்மையாக உழைத்த தொண்டர்களுக்கும் துரோகம் செய்தார். தனது சுயநலன் மட்டுமே முக்கியம் என்று நினைப்பவர் ஒரு இயக்கத்தில் தலைவராக இருக்க முடியாது. அதிமுகவை ஒரு குறிப்பிட்ட சமுதாய கட்சியாக மாற்றிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+