சசிகலாவை கட்சியில் சேர்ப்பீர்களா?.. சிரித்துக் கொண்டே ஓபிஎஸ் தந்த பதிலை பாருங்க!
மதுரை: சசிகலாவை கட்சியில் சேர்ப்பீர்களா என்ற கேள்விக்கு முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் என்ன பதில் சொன்னார் தெரியுமா?
Recommended Video
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் எந்த ஒரு திட்டம் தொடங்கப்பட வேண்டும் என்றாலும் தமிழ்நாட்டினுடைய அனுமதி பெற்று தான் செயல்படுத்த முடியும்.

புதிய அணை
புதிய அணை கட்ட அவர்கள் இஷ்டம் போல் செயல்பட முடியாது. தொடர்ந்து பேசிய அவர் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளதால் அ.தி.மு.க தலைமை கழக மகளிரணிச் செயலாளர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் இந்தியாவில் தமிழகத்தில் பெண்களை தாயாக மதிக்கின்ற தமிழ்த் திருநாடு சர்வதேச தினத்தன்று உலகத்தின் அத்தனை மகளிர்க்கும்., தாய்மார்களுக்கும்., சகோதரிகளுக்கும் என் இதயபூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

சசிகலா குறித்த கேள்வி
தொடர்ந்து சசிகலாவை அ.தி.மு.கவில் இணைத்துக் கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பியவுடன் அவர் "ஐயோ சாமி.? வாங்க சாமி? (சிரிக்கிறார்)" என்று கூறிவிட்டு விமான நிலையத்திற்குள் சென்றார். சிரித்துக் கொண்டே அவர் சென்றுவிட்டார். அவருடன் இருந்த நிர்வாகிகளும் சென்றுவிட்டனர்.

மதுரையில் தேவர் ஜெயந்தி
இதே மதுரையில் கடந்த ஆண்டு நடந்த தேவர் ஜெயந்தி விழாவின் போது ஓபிஎஸ்ஸிடம் சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொள்வீர்களா என கேட்டதற்கு அவர் கூறிய பதில்: அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் முடிவு செய்ய வேண்டும் என்றார். இந்த ஒரு வார்த்தையை அவர் சொல்லிவிட்டு கட்சியில் கடும் எதிர்ப்பை அவர் எதிர்கொள்ள நேரிட்டது.

ஓ ராஜா நீக்கம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட தனது சகோதரர் ஓ ராஜா, சசிகலாவை போய் சந்தித்ததால் அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அன்வர் ராஜாவுக்கு ஒரு நியாயம் ராஜாவுக்கு ஒரு நியாயமா என தொண்டர்கள் கேள்வி எழுப்பியதில் வேறு வழியில்லாமல் ஓ ராஜாவை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார். சசிகலா குறித்து பேசினாலே ஏதாவது ஒரு பிரச்சினை வெடிக்கிறது என்பதால் அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு ஆள விடுங்க என்ற பொருள்படும்படியான ஒரு பதிலை சொல்லிவிட்டு சென்றுள்ளார்
-
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications