தர்ம சங்கடமாக இருக்கு.. ஆளுநர் பதவிக்காக வாரணாசி சென்றுள்ளார் ஓபிஎஸ்.. தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி
மதுரை: மகனுக்கு எம்பி பதவியும், தனக்கு ஆளுநர் பதவி வேண்டும் என்பதற்காக ஓ பன்னீர்செல்வம் வாரணாசி சென்றதாக அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டி உள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும், தேனி தொகுதி அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத் குமார் ஆகியோர் வாரணாசியில் பிரதமர் மோடியின் பேரணியில் பங்கேற்றனர். மேலும் மோடியின் வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சி அன்றும் இருவரும் பங்கேற்றனர்.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமமுக கொள்கை பரப்புச் செயலாளரும், தேனி தொகுதி அமமுக வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன், ஒபிஎஸ் குடும்பத்துடன் வாரணாசி சென்றதை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது அவர் கூறுகையில். "மகனுக்கு எம்பி பதவியும், தனக்கு ஆளுநர் பதவி வேண்டும் என்பதற்காக ஒபிஎஸ் வாரணாசி சென்றுள்ளார். வாரணாசியில் பாஜக பேரணியில் ஓபிஎஸ் குடும்பத்துடன் பங்கேற்றது தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் ஓபிஎஸ் இவ்வாறு வாரணாசி செல்ல முடியுமா?. மே 23க்கு பிறகு யாருக்கு சேர்வது உண்மையான கூட்டம் என்பது அமைச்சர்களுக்கு தெரியும்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications