என் தந்தை இறந்தபோது கலைஞர் சொன்ன வார்த்தை.. மதுரையில் கண் கலங்கிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
மதுரை: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்ற பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்துள்ளது. மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக கூட்டணியில் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி போட்டியிடுகிறார்கள். இறுதிகட்ட பிரச்சாரத்தில் தன் தந்தை பற்றி பேசும்போது அவர் கண் கலங்கியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தன்னுடைய இறுதிகட்ட பிரச்சாரத்தில் பேசியபோது, "2016 தேர்தல், 2021 தேர்தல் என் அரசியல் பாதையை நினைவு கூற விரும்புகிறேன். சுமார் 20 வருடங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து ரயிலில் வந்தபோது, என் தந்தை இறைவன் பாதம் சென்றார். அமைச்சராகி ஒரு வாரத்திற்குள் காலமானார்." என்றார்.

கலங்கிய பிடிஆர்
திடீரென அவர் கண் கலங்கினார். அங்கிருந்த திமுகவினர் "பிடிஆர் வாழ்க" என்று அவரை ஆறுதல் படுத்தினர். கண்ணீரை துடைத்துக் கொண்டு பேசிய பழனிவேல் தியாகராஜன், "அன்றைக்கு நான் ஜப்பான் டோக்கியோவுக்கு ஒரு பணிக்காக சென்றிருந்தேன். எல்லாவற்றையும் விட்டு அவசர அவசரமாக வந்தேன். என் வாழ்வின் மிகப்பெரிய இழப்பு அது" என்றபோது மீண்டும் கண் கலங்கினார்.
'ஐயா நம்ம கூட தான் இருக்கார். கவலைப்படாதீங்க. நம்முடைய வெற்றி உறுதி' என்று தொண்டர்கள் சமாதானப்படுத்தினார்கள். மீண்டும் தொடர்ந்த பிடிஆர், "அப்போது தலைவர் கலைஞர் எங்களுக்கு எல்லா வகையில் உறுதியாக இருந்தார். கலைஞர் என்னிடம், நீங்கள் நாடு திரும்புங்கள். உங்கள் தந்தையின் தொகுதியில் வேட்பாளராக நில்லுங்கள்" என கூறினார்.
கலைஞருக்கு நன்றி கடன்
'எம்எல்ஏவாக தேர்வாகி, அமைச்சராக்குவோம்' என்றார். அப்போது எனக்கு திருமணமாகி மனைவி ஒரு குழந்தை இருந்தனர். மனைவி 2வது முறை கர்ப்பமாகியிருந்தார். முதல் மகனுக்கு 3 வயது. அவர்களை விட்டு இங்கு உடனடியாக வர முடியவில்லை. கர்ப்பமாக இருந்ததால் இங்கு பிரசவம் பார்க்கவும் மனைவி யோசித்தார். அவர் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவர்.
எல்லாவற்றையும் கடந்து தேர்தலில் நின்றேன். திடீரென ஒரு நாள் அமைச்சராக்கினார். அந்த நெருக்கடியான காலத்திலும் எனக்கு மகத்தான வாய்ப்பை வழங்கினார். கலைஞருக்கு நான் என்றும் நன்றி கடன் பட்டுள்ளேன்" என்று மீண்டும் கலங்கினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications