தருமபுர ஆதீனத்தின் பல்லக்கை உயிரைக்கொடுத்தாவது நான் சுமப்பேன்... மதுரை ஆதீனம் பரபரப்பு
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுர ஆதீனத்தில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு மதுரை ஆதீனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மதுரை: தருமபுர ஆதீனத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதற்கு மதுரை ஆதீனம் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். உயிரைக்கொடுத்தாவது எனது குருவான தருமபுர ஆதீனத்திற்கு பட்டினப்பிரவேசத்தை நடத்துவேன் என்றும் எனது குருவிற்கு நானே பல்லக்கு சுமப்பேன் என்றும் மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
Recommended Video
மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீன மடம் செயல்பட்டு வருகிறது. பழமையான சைவ ஆதீனமாக விளங்கும் அந்த ஆதீனத்தின் ஆதீனகர்த்தராக இருந்தா ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி காலமானார்.
அதனை தொடர்ந்து ஆதீனத்தின் 27 வது ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அதே ஆண்டு டிசம்பர் 13 ம் ஆதீனகர்த்தராக பதவியேற்று ஞானபீடத்தில் அமர்ந்தார். அன்றைய தினமே தருமபுரத்தில் ஏற்பாடு மனிதனை மனிதர்களே தூக்கும் பட்டி பிரவேச நிகழச்சி நடந்தது, வெள்ளிப் பல்லக்கில் புதிய ஆதீனகர்த்தர் அமரந்து வீதி உலாவந்தார். அந்த பல்லக்கை அதற்காக ஆதீனத்தில் உள்ள அடிதட்டு மக்கள் சுமந்து வந்தார்கள். இதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது.

பல்லாக்கு தூக்க கோட்டாட்சியர் தடை
ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்வதற்கு திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மனிதனை மனிதனே சுமப்பது மனித உரிமைக்கு எதிரானது என்று திராவிடர் கழகம் கூறி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது என்பதாலும் இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதாலும் தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்வதற்கு தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு
தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வில் பல்லக்கு தூக்க அனுமதி மறுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டதை ரத்து செய்து, நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவையினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். காலங்காலமாக நடைபெறும் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி குருவிற்கு நாங்கள் அளிக்கும் மரியாதை அதை மாற்றக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

மதுரை ஆதீனம் பேட்டி
பட்டினப்பிரவேச நிகழ்ச்சி பாரம்பரியம் மிக்கது அதற்கு தடை விதித்தது வருத்தம் அளிப்பதாக மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் இப்படி பேசுகிறேன் என்றால் அதற்குக் காரணம் தருமபுர ஆதீனம்தான். பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை முதல்வர் வந்து நடத்த வேண்டும். பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்த முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். முதல்வர் உடன்படவில்லை என்றால் அந்த சொக்கநாதரிடம் கோரிக்கை வைப்பேன் என்று கூறினார்.

500 ஆண்டு கால பாரம்பரியம்
500ஆண்டு காலமாக பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆங்கிலேயர் காலத்திலும் பட்டினப்பிரவேசம் நடைபெற்றது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும் நடந்தது... தமிழக முதல்வராக கருணாநிதி இருந்த போதும் பட்டினப்பிரவேசமும் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அரசியல் வேறு ஆன்மீகம் வேறு
சைவத்தையும் தமிழையும் பாதுகாத்து வருகிறார் தருமபுர ஆதீனம். அத்தகைய சிறப்பு வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்வதற்கு தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது என்று கூறினார். தருமபுர ஆதீனத்திற்கு ஆளுநர் வந்து சென்ற பின்னர்தான் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. என்று கூறிய மதுரை ஆதீனம், அரசியல் வேறு ஆன்மீகம் வேறு என்று தெரிவித்தார்.

உயிரைக்கொடுத்தாவது நடத்துவேன்
முதல்வர் ரகசிய காப்பு பிரமானம் எடுத்துக்கொள்கிறார். அந்த ரகசிய காப்பு பிரமானம் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று சொல்ல முடியுமா? அது எந்த அளவிற்கு பாரம்பரியமானதோ அதே போல பட்டினப்பிரவேசத்தில் பல்லக்கில் ஆதீனம் செல்வது பாரம்பரியமானது என்றார். அதை தடுத்து நிறுத்துவது வருத்தம் அளிக்கிறது என்றார். உயிரைக்கொடுத்தாவது எனது குருவான தருமபுர ஆதீனத்திற்கு பட்டினப்பிரவேசத்தை நடத்துவேன் என்று கூறினார். எனது குருவிற்கு நானே பல்லக்கு சுமப்பேன் என்றும் தெரிவித்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications