நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு மதிக்கவில்லை! CISF-யை கைது செய்வோம்னு சொல்றாங்க! மனுதாரர் குற்றச்சாட்டு
மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு மதிக்கவில்லை என மனுதாரர் ராம ரவிக்குமார் குற்றம்சாட்டினார். 144 தடை உத்தரவு போட்ட பிறகு, போலீஸார் மட்டும் கூட்டமாக நிற்கலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு மதிக்கவில்லை. இந்துக்களுக்கு வழிபாட்டு உரிமை இல்லையா?
144 தடை உத்தரவு போட்டதால் மத்திய பாதுகாப்பு படையினருக்கு அனுமதி இல்லை என்கிறார்கள். மீறினால் மத்திய படையையும் கைது செய்வோம் என போலீஸார் கூறுகிறார்கள். 144 தடை உத்தரவு போட்டுவிட்டு ஏன் போலீஸார் மட்டும் கூட்டமாக நிற்கிறார்கள்? இவ்வாறு ராம ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை
திருப்பரங்குன்ற மலையில் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என மதுரையை சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கார்த்திகை தீபம் இந்துக்களின் பாரம்பரியமான பண்டிகையாகும்.
தீபத் திருவிழா
தீபத் திருவிழாவின் போது, தீபத்தூண் அல்லது மலை உச்சியில் உள்ள மண்டபத்தில் தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலையில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாரம்பரிய முறையில் தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினேன்.
மலை உச்சி
மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற கோயில் நிர்வாகத்திற்கு சட்ட ரீதியாக தடை எதுவும் இல்லை. பழமையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு பதிலாக மலை உச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தீபத்தூண்
பழமையான தீபத்தூணை கோயில் நிர்வாகம் மூடி மறைத்துள்ளது. இது பாரம்பரிய இடத்தில் பக்தர்களின் மதச் சடங்குகள் செய்வதை தடுக்கும் செயலாகும். அது சட்டவிரோதமானதும் கூட! இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். மலை உச்சியில் உள்ள பழமையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் அன்று விளக்கு ஏற்ற அனுமதிக்க வேண்டும். அதற்கு உரிய பாதுகாப்பையும் அளிக்க உத்தரவிட வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
சுவாமிநாதன் ஆய்வு
இந்த நிலையில் தீபத்தூணில் விளக்கேற்ற முடியுமா என்பதை ஆய்வு செய்ய நீதிபதி சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை மீது ஏறிச் சென்று ஆய்வு நடத்தினார். இதையடுத்து இந்த வழக்கில் அவர் பிறப்பித்த உத்தரவில், "தீபத் தூணுக்கும் தர்காவுக்கும் இடையே 15 மீட்டர் இடைவெளி உள்ளது. எனவே இங்கு ஏற்றினால் எந்த பிரச்சினையும் வராது. எனவே கார்த்திகை தீபத்தன்று தீபத்தூணில் விளக்கேற்றுமாறு" உத்தரவிட்டார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
மேலும் "மாலை 6 மணிக்கு தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும். இல்லாவிட்டால் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்படும்" என்றதுடன், தீபத் தூணில் மனுதாரர், மத்திய பாதுகாப்பு படையினருடன் சென்று விளக்கேற்றலாம் என தெரிவித்திருந்தார்.
உச்சி பிள்ளையார் கோயில்
இந்த நிலையில் இன்று கார்த்திகை தீபத்தன்று, திருப்பரங்குன்ற மலையில் தீபத் தூணில் விளக்கேற்றப்படும் என எதிர்பார்த்த நிலையில், எப்போதும் போல் உச்சி பிள்ளையார் கோயில் அருகே இருக்கும் தீபத்தூணில் விளக்கேற்றப்பட்டது. இதனால் கோயில் வளாகத்தில் இந்து அமைப்பினரும், பாஜகவினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
144 தடை
அப்போது போலீஸாருக்கும் இந்து அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர திருப்பரங்குன்றம் மலை மீது 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீஸார் குவிந்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications