அட.. இந்தியை காணோம்... முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசிய மோடி!
மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி முழுக்க ஆங்கிலத்தில் பேசியது பெரிய வைரலாகி உள்ளது.
மதுரையில் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இன்று காலை நடந்த விழாவில் மோடி அடிக்கல் நாட்டினார்.
மதுரை தோப்பூரில் ரூ.1264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கிறது. இதற்காக இன்று காலை பிரதமர் மோடி மதுரை வந்தார்.

தமிழில் பேசினார்
எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி 10 நிமிடம் பேசினார். வந்துள்ள எல்லோருக்கும் என்னுடைய வணக்கம் என்று தமிழில் பிரதமர் மோடி உரையை தொடங்கினார். அதேபோல் கடைசியாக நன்றி, வணக்கம் என தமிழில் தெரிவித்து உரையை நிறைவு செய்தார் பிரதமர் மோடி

இந்தி இல்லை
ஆனால் பிரதமர் மோடி ஒரு முறை இந்த உரையின் போது இந்தியில் பேசவில்லை. எய்ம்ஸ் குறித்து முழுக்க முழுக்க அவர் ஆங்கிலத்தில் பேசினார். மோடி இப்படி ஆங்கிலத்தில் பேசியது வைரலாகி உள்ளது.

என்ன வழக்கம்
எப்போதும் சில வார்த்தைகள் தமிழில் பேசும் மோடி, பின்பு ஹந்தியில் பேசுவார். இதை பாஜகவினர் உறுப்பினர் ஒருவர் மொழிபெயர்ப்பார். ஆனால் இந்த முறை ஆச்சர்யமாக மோடி முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசினார்.

என்ன காரணம்
மோடி இப்படி ஆங்கிலத்தில் பேசியது ஏன் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. பொதுவாக தென்னிந்தியாவில் எங்கு பேசினாலும் மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் இந்தியில் பேசும் மோடி, இந்த முறை ஆங்கிலத்தில் பேசினார். அந்த ஆங்கில உரையைதான் எச்.ராஜா மொழிபெயர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications