டியூட்டியில் இருந்து அவசர அனுமதி கேட்டு! விஜய்யை பார்க்க போன போலீஸ் கான்ஸ்டபிள்! பாய்ந்தது நடவடிக்கை
மதுரை: மதுரைக்கு வந்து தவெக தலைவர் விஜய்யை பணி நேரத்தின் போது வரவேற்ற காவலர் கதிரவன் மார்க்ஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சீருடையின்றி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை வரவேற்ற வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் அவர் மீது மதுரை மாவட்ட காவல் ஆணையர் லோகநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம் தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவர் கதிரவன் மார்க்ஸ். சித்திரை திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக இவர் விளக்குத்தூண் காவல் நிலையத்தில் மாற்றுப் பணியில் இருந்தார். நேற்று முன் தினம் மார்க்ஸ் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் பணி செய்து வந்தார்.

இந்த நிலையில் தான் கொடைக்கானலில் சூட்டிங்கிற்கு பங்கேற்க சென்ற விஜய்யை காவலர் மார்க்ஸ் கட்சிக் கொடியுடன் வரவேற்று உள்ளார். அதாவது நேற்று முன் தினம் பணியில் ஈடுபட்டிருந்த மார்க்ஸ் அவசர வேலைக்காக வெளியில் செல்கிறேன் என்று சொல்லி பெர்மிஷன் வாங்கியிருக்கிறார். பெர்மிஷன் வாங்கிவிட்டு மதுரை விமான நிலையம் வந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை வரவேற்றுள்ளார்.
அப்போது அவர் கட்சிக் கொடி, துண்டினை தோழில் அணிந்தபடி வரவேற்று இருக்கிறார். இந்த நிலையில் அவர் விஜய்யை வரவேற்கும் வீடியோவானது மதுரை மாவட்ட ஆணையர் லோகனாதன் கண்ணில் பட்டுள்ளது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.
-
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
பெண்களின் பாதுகாப்பிற்கு புதிய அரண்.. ஜூன் 9ல் சிங்கப்பெண் அதிரடி படையை களமிறக்கும் முதல்வர் விஜய்! -
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஜய்க்கு அடுத்த அக்னி பரீட்சை.. அமைச்சர்களுக்கு முக்கிய அசைன்மென்ட்! இடைத் தேர்தலுக்கு ரெடியான தவெக -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
விஜய் அதிரடி.. தமிழக தனியார் பள்ளிகளுக்கு ₹3 லட்சம் அங்கீகார கட்டணம் ரத்தா? உண்மை என்ன? -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க!












Click it and Unblock the Notifications