Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஷ்பு போராட்டத்தில் ரஷ்ய பெண் பங்கேற்றது ஏன்? விசாரணைக்கு ரெடியாகும் போலீஸ்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் மதுரையில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ரஷ்ய பெண் ஒருவர் பங்கேற்றிருந்தார். இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. குற்றத்தில் ஈடுபட்ட நபரை, போலீசார் சில மணி நேரங்களில் கைது செய்திருந்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தை அறிவித்திருந்தன. மதுரையில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் குஷ்பு தலைமையில் பேரணி நடைபெறும் என்று பாஜக அறிவித்திருந்தது.

khushbu madurai bjp

அதாவது பாஜக மகளிர் அணி சார்பில் மதுரையிலிருந்து பேரணி தொடங்கும். இந்த பேரணி திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக சென்னையை அடையும் என்றும், சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியினர் ஆளுநரை சந்தித்து மனு அளிப்பார்கள் என்றும் பாஜக திட்டமிட்டிருந்தது. பேரணி அறிவிக்கப்பட்டு அதற்கான அனுமதி கோரப்பட்ட நிலையில், போலீசார் அனுமதியை மறுத்தனர். எனவே பேரணி என்பது போராட்ட வடிவமாக மாறியது.

மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள செல்லாத்தம்மன் கோயில் வளாகத்தில் திரண்ட பாஜக மகளிர் அணியினர், அங்குள்ள கண்ணகி சிலை முன் தீச்சட்டி ஏந்தியும், கண்ணகி வேடமிட்டும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரணியாக செல்ல முயன்ற அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இந்த சம்பவத்தில் கண்ணகியாக வேடமிட்ட இளம்பெண் கைதாக மறுப்பு தெரிவித்து அழுது புலம்பிய காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகியிருந்தன.

அதாவது, கண்ணகி வேடம் போட நெல்லையிலிருந்து வாடகைக்கு பேசி, நாடக கலைஞர்களை பாஜகவினர் அழைத்து வந்திருக்கின்றனர். கண்ணகி வேடம் போட வேண்டும் என்றுதான் தங்களை அழைத்து கூப்பிட்டு வந்ததாகவும், இங்கு வந்த பின்னர் கைது செய்ததால் இளம்பெண் அழுததாகவும் சக கலைஞர்கள் கூறியிருந்தனர். கைது என்று முன்னரே தெரிந்திருந்தால் நாங்கள் வந்திருக்கவே மாட்டோம் என்று கலைஞர்கள் புலம்பியுள்ளனர்.

இப்படி இருக்கையில் போராட்டம் தொடர்பாக மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது. அதாவது, கண்ணகி போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் பங்கேற்றிருந்தார். போராட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், "பெண்கள் முன்னேற்றம் மிகவும் முக்கியம், வன்கொடுமை செய்தி குறித்து கேள்விப்பட்டு இந்த போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

இந்தியாவை பொறுத்தவரை சுற்றுலா பயணிகளாக வரும் வெளிநாட்டினர் அரசியல் போராட்டங்களில் பங்கெடுப்பது தடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் போராட்டத்தில் பங்கெடுத்த ரஷ்ய பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ள காவல்துறை திட்டமிட்டிருக்கிறது. யார் இந்த ரஷ்ய பெண்? அவருக்கும் போராட்டத்திற்கும் என்ன தொடர்பு? ஏன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்? இதற்கான உள்நோக்கம் என்ன? என்பது குறித்து கேள்விகளை எழுப்ப காவல்துறை யோசித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+