மதுரையில் போலீஸ்காரர் பண்ற வேலையா இது.. சிக்கிய ஏட்டு பிரகாஷ் குறித்து பரபரப்பு தகவல்கள்
மதுரை: மதுரை தல்லாகுளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பீ.பி.குளம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் ஆன்லைன் மூலமாக நூதன முறையில் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை மதுரையில் விற்றது தெரியவந்தது. அவரை தீவிரமாக விசாரித்த போது, உடந்தையாக புதூரை சேர்ந்த கனி என்பவரும், மதுரை 6-வது சிறப்பு பட்டாலியனில் போலீஸ் ஏட்டாக பணியாற்றிய பிரகாஷ் என்பவரும் இருந்தது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். போலீஸ் ஏட்டு குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
லாட்டரிக்கு தமிழகத்தில் தடை உள்ளது என்றாலும், கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களான தேனி, கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சிலர் அவ்வப்போது ரகசியமாக வந்து லாட்டரியை விற்கிறார்கள். அப்படி விற்பவர்களை போலீசார் கைதும் செய்கிறார்கள். அதேநேரம் கேரள எல்லையை தாண்டி மதுரை, திருநெல்வேலி, திருச்சி, திருப்பூர் சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மறைமுகமாக சிலர் லாட்டரி விற்க முயற்சிக்கிறார்கள். அப்படி செயல்படுவர்களையும் போலீசார் கண்டுபிடித்து கைது செய்து வருகிறார்கள். இந்நிலையில் மதுரையில் லாட்டரி விற்றவர்களை கைது செய்தபோலீசார், அவருக்கு உடந்தையாக இருந்த காவலரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை தல்லாகுளம் போலீசார் அண்மையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பீ.பி.குளம் பகுதியை சேர்ந்த 52 வயதாகும் பாலாஜி என்பவரை சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது, அவர் ஆன்லைன் மூலமாக நூதன முறையில் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை மதுரையில் விற்றதை கண்டுபிடித்தனர்.
இவருக்கு உடந்தையாக, புதூரை சேர்ந்த கனி என்பவரும், மதுரை 6-வது சிறப்பு பட்டாலியனில் போலீஸ் ஏட்டாக பணியாற்றிய பிரகாஷ் (38) என்பவரும் இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த கனி மற்றும் ஏட்டு பிரகாஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் செல்போன் மூலம் கேரள லாட்டரி எண்களை வைத்து, அந்த சீட்டுகளை மதுரையில் பலரிடம் நூதன முறையில் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், கைது செய்யப்பட்ட ஏட்டு பிரகாஷ், 3 ஆண்டுகளுக்கு முன்பு சூதாட்ட கிளப் மற்றும் விடுதிகளில் உள்ளவர்களிடம் மாமூல் வசூலித்திருப்பதாக புகார் எழுந்தது.. அது தொடர்பான புகாரின்பேரில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு,6 மாதங்களுக்கு முன்பு மீண்டும் போலீஸ் பணியில் பிரகாஷ் சேர்ந்தாராம். அதன் பின்னரும், சூதாட்ட கிளப்களுக்கு சென்று, சோதனைக்கு வராமல் இருக்க மாமூல் வாங்கியதாக விசாரணை நடத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications