மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாம் தமிழகத்தில்தான் இருக்கிறோமா.. பொள்ளாச்சி வழக்கு அதிர்ச்சி அளிக்கிறது.. பிரேமலதா கண்டனம்!

Google Oneindia Tamil News

மதுரை: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை பார்க்கும்போது நாம் தமிழகத்தில் தான் இருக்கிறோமா என்ற அச்சத்தோடு கேள்வி எழுகிறது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையம் வருகை தந்த தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உட்சபட்ச தண்டனை வழங்கி பெண்களின் பாதுகாப்வை உறுதி செய்ய வேண்டும்.

Pollachi shocked me, It is horrible says DMDK Premalatha

பொள்ளாச்சி சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.பொள்ளாச்சி சம்பவத்தில் யாராக இருந்தாலும், எந்த ஒரு உயர்ந்த நிலையில் இருந்தாலும், எந்த பின்னனியில் இருந்தாலும் அவர்களுக்கு உட்சபச்ச மிகப் பெரிய தண்டனை வழங்க வேண்டும், அப்படி வழங்கினால்தான் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். பெண்கள் யாரிடம் பழகினாலும் ஆராய்ச்சி செய்து பழக வேண்டும்.

தமிழகத்தில்தான் இருக்கிறோமா என்ற கேள்விக்குறியாகியுள்ளது.பெண் குழந்தைகளை வைத்துள்ள தாய்மார்கள் அச்சம் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.,சி.பி.ஐ விசாரனைக்கு மாற்றினால் மட்டும் போதாது யார் தவறி செய்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேன்டும்.சமூக வலைதளங்கள் அனைத்தும் சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறது.

வீடியோவாடா எடுக்கறீங்க வீடியோ.. போடு.. பொள்ளாச்சி காம கும்பலை சரமாரியாக தாக்கிய மக்கள்- வைரல் வீடியோ

வேட்பாளர்கள் தேர்வு குறித்து இன்று விஜயகாந்த் நேர்காணல் நடத்துகிறார். இன்று நடைபெறும் அ.தி.முக தலைமையிலான கூட்டத்தின் முடிவில் எந்தெந்த தொகுதிகள் எந்தெந்த கட்சிக்கு ஒதுக்கப்படும் என்பது குறித்த கூட்டாக முடிவு செய்து அறிவிக்கப்படும்.

தே.மு.தி.க சார்பில் எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து 3 அல்லது 4 நாட்களில் அறிவிக்கப்படும், அதனை விஜயகாந்த்தும் தலைமைக் கழகமும் முடிவெடுத்து அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

English summary
Pollachi shocked me, It is horrible says DMDK leader Premalatha Vijayakanth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X