மதுரை விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்காதது ஏன்?.. பொன் ராதாகிருஷ்ணன் அடடே விளக்கம்
Recommended Video

மதுரை: மதுரையில் தமிழ்த்தாய் வாழ்த்து முன் கூட்டியே இசைக்கப்பட்டிருக்கும் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட மோடிக்கு எதிராக மதிமுக, மே 17 இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் இயக்கம் ஆகியன இணைந்து கருப்பு கொடியை ஏந்தின. மேலும் மோடி மதுரை விமான நிலையத்தை மிதித்தவுடன் வைகோ தன்னிடம் இருந்த கருப்பு பலூன்களை பறக்கவிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை 11.30 மணியளவில் மதுரை விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர், துணை முதல்வர், நாடாளுமன்ற சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அமைச்சர்கள், உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

ஆங்கிலத்தில் பேசிய மோடி
அங்கிருந்து கருப்பு கார் மூலம் தோப்பூர் சென்றார் பிரதமர் மோடி.
இந்த நிலையில் மோடி எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று நடந்த அரசு விழாவிலும் சரி கட்சி விழாவிலும் சரி இந்தியில் பேசவில்லை. மாறாக ஆங்கிலத்திலேயே பேசினார்.

அதிருப்தி
பொதுவாக அரசு விழாக்கள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் முடிக்கப்படும். ஆனால் இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடவில்லை, தேசிய கீதமும் இசைக்கப்படவில்லை. இதை பார்த்த பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

பாதிப்பு
இந்த நிலையில் தமிழ்த்தாய் பாடாதது குறித்தும் வைகோ கருப்பு கொடி காட்டியது குறித்தும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில் மோடிக்கு எதிராக கருப்பு கொடி, கருப்பு பலூன்களை பறக்கவிட்டதால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

என்ன அவசரம்?
மதுரையில் நடந்த எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் முன்கூட்டியே தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டிருக்கும். பாஜக கூட்டணி குறித்து இப்போது என்ன அவசரம்? உரிய நேரத்தில் கூறுவோம் என்றார் பொன் ராதாகிருஷ்ணன். எனினும் தேசிய கீதம் பாடாதது ஏன் என்பது குறித்து அவர் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications