விஜய் சேதுபதி வீட்டு முன்பு போராட்டம் நடத்துவோம்.. மதுரையை பரபரப்பாக்கிய போஸ்டர்
மதுரை: '800' திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்தால், மக்களைத் திரட்டி அவர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று, மதுரை மாநகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 என்ற படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில்,இந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

விஜய் சேதுபதிக்கு வலியுறுத்தல்
இலங்கை மற்றும் சிங்களவர்களுக்கு ஆதரவானர் எனவும், ஈழத்தமிழர் இனப்படுகொலையை நியாயப்படுத்தியவர் எனவும், அரசியல் கட்சியினரும், திரைப்பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். திரையுலகிலும் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள்கள் விடுக்கப்படுகிறது.

வைரமுத்து கருத்து
வைரமுத்து கூறுகையில், கலையாளர் விஜய் சேதுபதிக்கு... சில நேரங்களில் செய்து எய்தும் புகழைவிடச் செய்யாமல் எய்தும் புகழே பெரிதினும் பெரிது செய்யும். நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள். வளர்பிறையில் கறை எதற்கு? இன உரிமைக்காகக் கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம்; நீங்கள் விவேகி. இவ்வாறு விஜய் சேதுபதி டுவிட்டர் அக்கவுண்டை டேக் செய்து கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டிருந்தார்.

பாரதிராஜா எதிர்ப்பு
முன்னதாக, இயக்குநர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில், மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால், பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர். அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் கடைக்கோடி மக்களின் எண்ணப் பிரதிபலிப்புமே காரணம். எங்களைப் பொறுத்தவரை முத்தையா முரளிதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான். எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதைத் தவிர்க்க முடியுமா பாருங்கள். தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவு கொள்ளப்படுவீர்கள் என்று தெரிவித்திருந்தார்.

மதுரையில் போஸ்டர்
இந்த விவகாரம் குறித்து படத்தில் நடிப்பதா வேண்டாமா என நடிகர் விஜய் சேதுபதி இன்னும் முடிவெடுக்காத நிலையில், மதுரையில் தமிழக இளைஞர் அரசியல் முற்போக்கு கட்சியை, சேர்ந்தவர்கள் 800 திரைப்படம் என்ற துரோக வரலாறுக்கு துணை போவது தவறு எனவும், எங்களுக்கு யாருடைய அறிக்கையும் தேவையில்லை எனவும், நடிகர் விஜய் சேதுபதி நடித்தால் மக்களை திரட்டி அவரது வீட்டில் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என சுவரொட்டிகளை மதுரை மாநகர் முழுவதும் ஒட்டியுள்ளனர்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications