தென்னக கர்ணனே! தென்மண்டல இளவரசனே.. எழுச்சி நாயகனே! தெறிக்கவிடும் அழகிரி மகன் பிறந்த நாள் போஸ்டர்கள்!
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதியின் பிறந்த நாளை தங்களுக்கே உரிய அதகள குசும்புடன் அமர்க்களப்படுத்தி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் மு.க. அழகிரி. கருணாநிதி காலத்திலும் சரி அவரது மறைவுக்குப் பின்னரும் சரி, திமுகவில் அவர் சேர எடுத்த முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை.

நடக்காத அழகிரி ஆசை
திமுகவின் அறக்கட்டளைகளில் ஏதாவது ஒன்றில் மகன் துரை தயாநிதிக்கும் பொறுப்பு வழங்கப்பட வேண்டு என்பதுதான் மு.க. அழகிரியின் நிபந்தனைகளில் ஒன்றாக இருந்தது. ஆனாலும் காலம் ஓடியதுதானே தவிர எதுவும் நடக்கவில்லை.

அழகிரி தரப்பில் பதில் வராது
இதனிடையே மு.க. அழகிரி சமாதானப்படுத்தப்படுகிறார்; மீண்டும் திமுகவில் வலம் வருவார் என செய்திகள் வரும்.. பின்னர் ரஜினிகாந்துடன் கைகோர்க்கிறார்; பாஜக வளைத்துக் கொண்டிருக்கிறது என தகவல்கள் வரும். ஆனாலும் எதற்கும் மு.க. அழகிரி தரப்பில் இருந்து ரியாக்ஷன் வராது.

துரை தயாநிதி ட்வீட்டுகள்
அதேநேரத்தில் அழகிரி மகன் துரை தயாநிதி எப்போதாவது போடும் அரசியல் ட்வீட்டுகள் பெரும் களேபரத்தை உண்டாக்கிவிட்டுத்தான் ஓயும். இந்த நிலையில்தான் அழகிரி மகன் துரை தயாநிதி பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் அதகளமாக தென்மாவட்டங்களில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

துரைதயாநிதி பிறந்த நாள்
மு.க. அழகிரிக்கு கடந்த காலங்களில் அவரது ஆதரவாளர்கள் பட்டையைக் கிளப்பும் வாசகங்களுடன் போஸ்டர் அடித்து மதுரைக்காரய்ங்க... என தெறிக்கவிடுவர். இப்போதும் தென்ன கர்ணனே! தென்மண்டல அரசரின் இளவரசனே! எழுச்சி நாயகனே! என ஏகத்துக்குமான அடைமொழிகளுடன் துரை தயாநிதி பிறந்த நாளுக்கு போஸ்டர் ஒட்டி அமர்க்களப்படுத்திவிட்டனர்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications