பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.. பிரதமர் மோடி, முதல்வர் பங்கேற்பு.. மதுரையில் மாற்றம் வருமா?
மதுரை: மதுரையில் நடந்து வரும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி, முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய தலைவர்கள் பிரசாரம்
பாஜக மற்றும் அதிமுக, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேசிய தலைவர்களான அமித்ஷா, ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன், யோகி ஆதித்யநாத், ராஜ்நாத் சிங் ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். ஏற்கனவே முதல்கட்டமாக சென்னையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, சில நாட்களுக்கு முன்பு தாராபுரத்தில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

மீனாட்சி அம்மன் கோவிலில் மோடி தரிசனம்
இந்த நிலையில் இன்று மதுரையில் நடக்கும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் மோடி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு தனி விமானத்தில் மதுரை வந்தார். பின்னர் அவர் காரில் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்த மோடி, மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பிரம்மாண்ட பொதுக்கூட்டம்
கோவிலில் உள்ள பிரமாண்ட தூண்களில் உள்ள சிற்பங்களையும், விதானத்தில் வரையப்பட்டு இருந்த ஓவியங்களையும் பார்த்து ரசித்தார். அங்கு இருந்த பக்தர்களை பார்த்து கையசைத்தார்.பசுமலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியுள்ள பிரதமர் மோடி, இன்று காலை 11.30 மணிக்கு மதுரை பாண்டிகோவில் ரிங்ரோடு அம்மா திடலில் நடைபெறும் பிரம்மாண்ட பிரசார கூட்டத்துக்கு வருகை புரிந்தார்.

பிரதமர் பிரசாரம்
அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அதிமுக தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பிரசாரம் செய்தார். இதேபோல் முதல்வர்,, துணை முதல்வர் ஆகியோரும் பிரசார கூட்டத்தில் உரையாற்றினார்கள்.

5 அடுக்கு பாதுகாப்பு
இதேபோல் கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பிரதமரின் வருகையால் மதுரை மற்றும் நாகர்கோவிலில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications