செல்போன், தம், டிவி.. மதுரை மத்திய சிறையில் சகல வசதி... அதிரடி ரெய்டில் அதிர்ச்சி
மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
மதுரை: மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
சில நாட்களுக்கு முன் சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசாக இருந்து வந்தது வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, போலீசார் அதிரடி சோதனை நடத்தி, கைதிகள் பயன்படுத்திய செல்போன்கள், விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த டி.வி.க்கள் உள்பட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், மதுரை மத்திய சிறையில் கைதிகள் செல்போன்கள் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, உதவி ஆணையர் வெற்றிச்செல்வன் தலைமையில் 70 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர்.
சிறை வளாகம், கைதிகள் அறை, சமையலறை, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது, கைதிகளிடம் இருந்து பிளேடு, செல்போன், பீடி மற்றும் இரும்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, சிறையில் பாடம் நடத்தும் ஆசிரியர், கைதிக்கு செல்போன் கொடுத்ததாக கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். ஆசிரியர் கைது செய்யப்பட்டதை அடுத்து சிறையில் போலீசார் மீண்டும் சோதனை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications