மதுரை மத்திய தொகுதி.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சுந்தர்.சி தோல்வி.. தவெக வெற்றி!
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் என்டிஏ கூட்டணி வேட்பாளரான சுந்தர்.சி ஆகிய இருவருமே தோல்வி அடைந்தனர். இந்த தொகுதியில் தவெக சார்பாக போட்டியிட்ட மதார் பதுருதீன் அபார வெற்றியை பெற்றுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. இதில் 85.10% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தமிழ்நாடு முழுவதும் 4.87 கோடி பேர் வாக்களித்திருக்கின்றனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு முழுக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நட்சத்திர தொகுதியாக மாறி இருக்கிறது மதுரை மத்திய தொகுதி. ஏனென்றால் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து என்டிஏ கூட்டணி சார்பாக இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி களமிறக்கப்பட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது சுந்தர்.சி-யின் வார்த்தை விளையாட்டில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சிக்கினார்.
இதனால் மதுரை மத்திய தொகுதி களம் சூடாகியது. இன்னும் சொல்லப் போனால், நடிகை குஷ்புவை விடவும் சுந்தர்.சி-யின் நிதானமான பேச்சு பலரையும் கவனிக்க வைத்தது. இந்த நிலையில் மதுரையில் மதுரை கல்லூரியில் மத்திய தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி இருக்கிறது. தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவடைந்து, EVM இயந்திரம் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி சுந்தர்.சி முன்னிலையில் இருக்கிறார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பின்னடைவை சந்தித்தார்.
9.30 மணியளவில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர்.சி இருவருமே பின்னடைவை சந்தித்தள்ளனர். இவர்களை விடவும் தவெக வேட்பாளர் முஸ்தபா என்ற மதார் பதுருதீன் முன்னிலையில் இருந்தார். அந்த முன்னிலையை கடைசி சுற்று வரை மதார் பதுருதீன் தக்க வைத்து கொண்டுள்ளார். இதனால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர்.சி ஆகிய இருவருமே தோல்வியை சந்தித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications