ராஜ ராஜ சோழன் ஆட்சியில் தீண்டாமை, பெண்ணடிமை இருந்தது.. பா. ரஞ்சித்தை மிஞ்சிய கே எஸ் அழகிரி!
மதுரை: ராஜ ராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் தீண்டாமை மற்றும் பெண்ணடிமை இருந்தது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து விமர்சித்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனால் கைது நடவடிக்கைக்கு பயந்து முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார் ரஞ்சித். மன்னர் குறித்து பேசியதற்காக அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி வரும் 19ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தார்.

சமூக சீர்த்தவாதி கிடையாது
இந்நிலையில் ரஞ்சித்துக்கு ஆதரவாகவும் அவரை மிஞ்சும்படியும் பேசியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ராஜ ராஜ சோழன் ஒன்றும் சமூக சீர்த்தவாதி கிடையாது

சமூக நீதி கிடையாது
சோழர்கள் ஆட்சிக்காலத்தில் சமூக நீதி கிடையாது. அவர்கள் ஆட்சியாளர்கள் மட்டுமே. சோழ மன்னர்களின் ஆட்சியில் சமூக அமைப்பு சரியாக செயல்படவில்லை.

தீண்டாமை, பெண்ணடிமை
ராஜ ராஜ சோழன் ஆட்சியின் தீண்டாமை பெண்ணடிமை இருந்தது. சோழர்களின் ஆட்சிக்காலம் குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே பொற்காலமாக இருந்தது. இவ்வாறு ராஜ ராஜ சோழன் குறித்து கேஎஸ் அழகிரி பேசினார்.

ரஞ்சித்தை தாண்டிய கேஎஸ் அழகிரி
ராஜ ராஜ சோழன் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்த ரஞ்சித்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலித் பிரிவு பாராட்டு தெரிவித்ததோடு ஆதரவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி ரஞ்சித்தையும் தாண்டி ராஜ ராஜ சோழனை சாடியுள்ளார்.

வறட்சி பாதித்த மாநிலம்
மேலும் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆட்சியாளர்கள் தங்களுக்கு தண்ணீர் கிடைத்தால் போதும் என்ற நிலையில் உள்ளனர் என்றும் அவர் கூறினார். நீர்நிலைகளை பராமரித்து மேம்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கேஎஸ் அழகிரி குற்றம்சாட்டினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications