போஸ்டர் அடிக்க கூடாது என்று சொன்ன ரஜினி... அதையும் போஸ்டராக ஒட்டிய மதுரை ரசிகர்கள்

தலைமையிடம் இருந்து உத்தரவு வரும் வரை போஸ்டர்கள் அடிக்க வேண்டாம் என்று ரஜினி ரசிகர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: போஸ்டர் அடிக்க வேண்டாம் என்று ரஜினி சொன்னதையே போஸ்டராக அடித்து ஒட்டி அதகளப்படுத்தியுள்ளனர் மதுரை ரசிகர்கள். இந்த போஸ்டரும் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ரஜினிக்கு அரசியல் ஆசை இருக்கிறதோ இல்லையோ அவரது ரசிகர்களுக்கு அவரை அரசியலுக்கு இழுக்க வேண்டும் என்ற ஆசை நிறையவே இருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே தீவிர அரசியலில் ரஜினி ஈடுபடவேண்டும் என்று கூறி போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர்.

ஆன்மீக அரசியல் என்று சொன்ன ரஜினி அமைதி காப்பதால் கடந்த சில மாதங்களாக போஸ்டர் ஒட்டுவது அதிகரித்து வருகிறது.

2021ல் நாளைய தமிழகமே

2021ல் நாளைய தமிழகமே

நாளைய தமிழகமே... ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்று போஸ்டர் ஒட்டி அரசியலுக்கு அழைக்கின்றனர் ரஜினி ரசிகர்கள். வேலூர், மதுரை, கோவை என பல மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ரஜினியின் போஸ்டர்கள்

ரஜினியின் போஸ்டர்கள்

மதுரையில் ரஜினி ரசிகர்கள் தினம் தினம் போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். நான் எம்ஜிஆர் அல்ல எம்ஜிஆரைப்போல நல்லாட்சி தருவேன் என்று ரஜினி சொல்வதைப் போல போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

ரஜினியை அழைக்கும் போஸ்டர்

ரஜினியை அழைக்கும் போஸ்டர்

நாளைய தமிழகமே 2021 என்று கூறியும் போஸ்டர் ஒட்டினர். நீங்க முன்னாலே, தன்னாலே என்று கூறியும் ஒரு ஓட்டு கூட மிஸ் ஆகாது, தலைவரால் மட்டுமே தமிழகத்தில் மாற்றம் தரமுடியும் என்று கூறி ஒட்டினர். திரவிட அரசியல் போதும் ஆன்மீக அரசியல் வேண்டும் என்றும் கூறி போஸ்டர்கள் ஒட்டினர். இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ரசிகர்களுக்கு உத்தரவு

ரசிகர்களுக்கு உத்தரவு

ரசிகர்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி தன்னிச்சையாக செயல்பட வேண்டாம் தலைமையிடம் இருந்து உத்தரவு வரும் வரை போஸ்டர்கள் அடிக்க வேண்டாம் என்று ரஜினி ரசிகர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

போஸ்டராக ஒட்டிய ரசிகர்கள்

போஸ்டராக ஒட்டிய ரசிகர்கள்

ரசிகர்களுக்கு போஸ்டர் அடிக்க வேண்டாம் என்று தலைமை உத்தரவு தலைவா நீ எப்ப கட்சி தொடங்கினாலும் உனக்கு மக்கள் ஆதரவு என்று கூறி அதையே போஸ்டராக ஒட்டியுள்ளனர் ரஜினி ரசிகர்கள். இன்னும் என்னென்ன செய்யப்போகிறார்களோ ரஜினி ரசிகர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+