மதுரை: நான் கொடுத்த வாக்குறுதியோ பாபாஜியிடம்... ரஜினி ரசிகர் ஒட்டிய சர்ச்சை போஸ்டர்!
மதுரை: ரஜினிகாந்த் தமிழக மக்களுக்கும், ரசிகர்களுக்கும் போகிற போக்கில் கொடுத்த வாக்குறுதியை மாற்றி கொள்ளாமல், பாபாஜிக்கு அளித்த வாக்குறுதிபடி ரஜினி நலமுடன் இருக்க 11-வது முறையாக இமயமலை செல்வதாக ரசிகர் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் சர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் , நாடு முழுவதும் ரசிகர்களை கொண்ட நடிகர் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. நள்ளிரவு 12 மணி முதலே கேக் வெட்டி ரஜினியின் பிறந்தநாளை ரசிகர்களும் திரை பிரபலங்களும் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில், அவரது ரசிகர்கள் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகளை தமிழகத்தின் பல பகுதிகளில் ஒட்டி வருகின்றனர். கொரானா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய அளவில் தனது பிறந்தநாளை நடிகர் ரஜினிகாந்தும், அவரது ரசிகர்களும் கொண்டாடவில்லை.

ரஜினிகாந்த் பிறந்தநாள்
இந்த முறை நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், அவர் உடல்நலம் பெற சிறப்பு பூஜைகள் நடத்தவும் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் மதுரையை சேர்ந்த ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது.

ரசிகர்கள்
அந்த போஸ்டரில், நீ தமிழக மக்களுக்கும், ரசிகர்களுக்கும் கொடுத்த வாக்குறுதியை போல் அல்ல, நானும் போகிற போக்கில் மாற்றிக்கொள்ள? நான் கொடுத்த வாக்குறுதியோ பாபாஜியிடம், அதை நிறைவேற்றிட தொடர்ந்து 11வது முறையாக ரஜினிகாந்த் நலமுடன் இருக்க பாபா குகைக்கு செல்கிறேன்.

1000 மாணவர்கள்
ரஜினிகாந்த் 72வது பிறந்தநாளுக்கு 1000 மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கிவிட்டு, அன்று இரவே இமயமலையில் உள்ள பாபா குகைகக்கு செல்வதாக போஸ்டர்களை மதுரை மாநகர் பகுதி முழுவதும் ஒட்டியுள்ளார். இந்த போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் முடிவை போகிற போக்கில் மாற்றிக் கொண்டார் என விமர்சனம் செய்து ஆதங்கத்தை வெளிப்படுத்தி ஒட்டியுள்ளதால் அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட காலம்
நீண்ட காலமாக ரஜினியை அரசியலுக்கு ரசிகர்கள் அழைத்து வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், கட்சியை தொடங்க எல்லாம் ரெடி. இனி அம்பு விடுவது மட்டும்தான் பாக்கி என்றார். ஆனால் இரு ஆண்டுகளாக எதையும் செய்யாமல் இருந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் அரசியலுக்கு வரும் முடுவுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் வரேன் என்றார், பின்னர் அமைதியாக இருந்தார், இதையடுத்து தனது கட்சிக்கு தமிழருவிமணியன், அர்ஜுனமூர்த்தி ஆகியோரை முக்கிய பதவிகளில் நியமிப்பதாக கூறிய நிலையில் திடீரென கட்சியை தொடங்கவில்லை என கூறிவிட்டார். இது ரசிகர்களுக்கு பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications