1.5 லட்சம் பேர் நாளைக்கு நீட்! இப்போ சொல்லுங்க அந்த ரகசியத்தை! உதயநிதியிடம் கேட்கும் ஆர்பி உதயகுமார்
மதுரை: தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுத இருக்கும் நிலையில், நீட் தேர்வின் ரத்து ரகசியத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலின் முன்வருவாரா அதற்கு முதலமைச்சர் துணை புரிவாரா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் 557 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெறுகிறது. சுமார் 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பத்துள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. இந்நிலையில் நீட் தேர்வின் ரத்து ரகசியத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலின் முன்வருவாரா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வு: இதுதொடர்பாக பேசியுள்ள அவர்,”இந்த ஆண்டு நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் 557 நகரங்களில் நடக்கிறது. இந்தியா முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள் தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுகிறார்கள். 2021ஆம் ஆண்டில் 1.10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 58,922 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். 2022ஆம் ஆண்டு 1.32 லட்சம் மாணவர்களின் தேர்வு எழுதியதில் 67,787 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர்.
ஆர்பி உதயகுமார்: 2023 ஆண்டில் 1.45 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 78,693 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 2024யில் ஒன்னரை லட்சம் பேர்கள் தேர்வு எழுதி தயாராக இருக்கின்றார்கள். இதிலே நாம் பார்க்க வேண்டியது என்னவென்றால் இந்த நீட் தேர்வு ஏழை எளிய சாமானிய மக்களுக்கு இன்னும் எட்டாக்கனியாக உள்ளது. ஏனென்றால் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்கள் வெளியே செல்கிறார்கள். நீட் தேர்வு எழுதக்கூடிய முன் வருகிற மாணவர்கள் இந்த நான்காண்டு காலத்திலே பார்க்கிற போது ஒரு லட்சம் என்று சொன்னால் பத்தில் ஒரு சகவீதம் தான் உள்ளது.
7.5% இட ஒதுக்கீடு: நீட் தேர்வுக்கு தீர்வு காணும் வகையில இந்தியாவிற்கு வழிகாட்டும் வகையில் 7.5 இட ஒட்டிக்கீட்டை எடப்பாடியார் கொண்டு வந்தார். ஆனால் அந்தத் திட்டத்தை அரசு மூடி மறைக்கிறது. சாதனையை அரசு திரையிட்டு மூடப்பார்க்கிறது. ஆனால் நீட்தேர்வுக்கு உந்து சக்தியாக 7.5 சகவீத இடஒதுக்கீடு இருந்தது. இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த நீட் தேர்வை இதயக்கனியாக மாற்றியவர் எடப்பாடியார். இந்த அரசு வாய்ச்சொல் வீரராக இருக்கிறார்களே தவிர மக்களுக்காக ஏதுமில்லை.
உதயநிதி ஸ்டாலின்: நாங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்றால் நீட் தேர்வை ஒரே கையெழுத்திலே ரத்து செய்வோம் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலினும் அவரது தந்தையாரும் திமுக தலைவர் ஸ்டாலினும் நீட் தேர்வுக்கு விடை காணவும், ரத்து செய்வதற்கு எந்த முயற்சி எடுக்கவில்லை. மக்களை திசை திருப்புகிற, ஏமாற்றுகிற வகையில் ஒரு கையெழுத்து போதும் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின்,ஒரு கோடி கையெழுத்தை பெற்று அதை எங்கே இருந்தது குப்பை கூடத்தில் தான். ஒரு கையெழுத்து ரகசியம் என்று கூறி ஒரு கோடி கையெழுத்து பெற்ற ரகசியம் மர்மம் என்ன?.
நீட் தேர்வு ரத்து ரகசியம் : நீட் தேர்வு ரத்து ரகசியம் என சொன்ன உதயநிதி ஸ்டாலின் அவர்களே எப்போது வெளியிடப் போகிறீர்கள்? ஒரு கையெழுத்தில் ரத்து செய்வோம் என்று சொன்ன அந்த ரகசியத்தை எப்போது உடைக்க போகிறீர்கள்? எப்போது மக்களிடத்தில் வெளியிடப் போகிறீர்கள். ஆகவே இது மக்களை ஏமாற்றுகிற இந்த செயலை நீங்கள் தொடர்வீர்களானால் எத்தனை உயிர்களை நாம் இன்னும் பலி கொடுக்க வேண்டும். முதலமைச்சர் துணை புரிவாரா?” என கூறினார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications