குளறுபடிகளால் தான் தேனியில் மறுவாக்குப்பதிவு... ஓ.பி.எஸ் ஓபன் டாக்
மதுரை: ஒப்புகைச் சீட்டு குளறுபடிகள் காரணமாகவே தேனியில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளதாகவும், அங்கு தவறுகள் நடைபெற வாய்ப்பில்லை எனவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 38 தொகுதிகள் மற்றும் காலியாக இருந்த 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்த தேர்தலில் 72 சதவிகித வாக்குகள் பதிவாகின.
தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், ஈரோடு, தேனியில் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ள 3 சாவடிகளின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடி
தேனி நாடாளுமன்ற தொகுதி, ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம் கம்மவர் சரஸ்வதி நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 67-ல் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அதே போல், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடுகபட்டி சங்கரநாராயணா நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 197-ல் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது..

சத்யபிரதா சாஹு விளக்கம்
மறு வாக்குப்பதிவுக்காகவே தேனிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விளக்கம் அளித்துள்ளார்.

தேனியில் மறுவாக்குப்பதிவு
இந்தநிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேனியில் மறுவாக்குப்பதிவு நடக்க இருப்பது குறித்து தேர்தல் ஆணையமே விளக்கமளித்துள்ளதாக தெரிவித்தார்.

ஆளுநருக்கு வலியுறுத்தல்
ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேர் விடுதலை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இது குறித்து ஆளுநரிடம் தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

தமிழக அரசு நடவடிக்கை
தமிழகத்தில் பாலியல் மற்றும் குழந்தைகள் கடத்தல் தொடர்பான புகார்களை கண்காணித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேவையற்றது
தேனி தொகுதியில் குளறுபடிகள் ஏதுமின்றி தேர்தல் நடந்த நிலையில் 2 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது தேவையற்றது என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications