கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. இன்று தொடங்கிய முக்கிய நடைமுறை
மதுரை: மதுரை மாவட்டம் வைகையாற்றில் இறங்கும் கள்ளழகர் மீது பாரம்பரிய முறைபடி தண்ணீர் பீய்ச்சி அடிக்க இன்று முன்பதிவு தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மதுரை ஆட்சியர் சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது பாரம்பரிய முறைபடி தோல் பையில் தண்ணீர் பீய்ச்சி அடிக்க இன்று முதல் அதாவது ஏப்ரல் 7ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி உயர் அழுத்த மோட்டார்கள், மின் மோட்டார்களை கொண்டு தண்ணீர் பீய்ச்சி அடிக்கக் கூடாது. அது போல் கள்ளழகர் அழகர் மலையிலிருந்து புறப்பட்டு வைகை ஆற்றுக்கு வரும் வரை இடையில் எந்த இடத்திலும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கவே கூடாது. இவ்வாறு மதுரை ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி இன்றைய தினம் முன் பதிவு தொடங்கியுள்ளது. இந்த முறை லட்சக்கணக்கான பக்தர்கள் சித்திரை திருவிழாவுக்கு வருவர் என தெரிகிறது.
வழக்கு என்ன?: மதுரையை சேர்ந்த நாகராஜன் என்பவவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: உலக புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. பாரம்பரியமாக ஆட்டுத்தோலை பயன்படுத்தி தோல் பைகளில் நறுமண நீர் நிரப்பி துருத்தி எனும் சிறிய குழாய் மூலம் தண்ணீரை கள்ளழகர் மீது பக்தர்தள் பீய்ச்சி அடிப்பார்கள்.
பக்தர்கள் விரதமிருந்து தோல் பையில் தண்ணீர் சுமந்து வந்து சிறிய குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் ஐதீகத்தை மீறி தோல் பையில் அதிக விசைத் திறன் கொண்ட பிரஷர் பம்புகளை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள், வேதி பொருள்களை கலந்து பீய்ச்சி அடிக்கிறார்கள்.
தங்க குதிரை பாதிப்பு: இதனால் கள்ளழகர், தங்கக் குதிரை, சுவாமியின் ஆபரணங்கள் பாதிக்கப்படுகிறது. மேலும் திரவியம், வேதிப் பொருட்கள் கலந்த தண்ணீரால் பட்டாச்சாரியார்கள், பக்தர்கள், பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த ஆண்டு நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மூலம் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க தடை விதிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு கடந்த இரு நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் உலக பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் பாரம்பரியமான நடைமுறையான தண்ணீரை பீய்ச்சி அடிப்பது நடந்து வருகிறது. ஆனால் இது பெண்கள், குழந்தைகளை ஒரு சில இளைஞர்கள் வேண்டுமென்றே அடித்து துன்புறுத்தி வருகிறார்கள்.
என்னென்ன கட்டுப்பாடுகள்: இது போன்ற துன்புறுத்தல்களில் இருந்து அவர்களை பாதுகாக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனவே இனி பாரம்பரிய உடை அணிந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அவர்கள் முன் அனுமதி பெற்றுக் கொண்டு அனுமதிக்கப்பட வேண்டும். கள்ளழகர் மலையிலிருந்து இறங்கி வரும் வழிகளில் எங்குமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க கூடாது.
மதுரை ஆட்சியர் செய்திக் குறிப்பு: ஆற்றில் இறங்கும் போது மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள், முதியோர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை காவல் துறையினர் அனுமதிக்கக் கூடாது. இந்த உத்தரவு இனி வரும் காலங்களிலும் பின்பற்ற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் துறை ஆணையர், மாவட்ட எஸ்பி ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அது போல் சித்திரை திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு, தண்ணீர், பானகம் உள்ளிட்டவைகளை வழங்குவதற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறையில் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications