ஓய்வு பெற்ற வட்டாட்சியரை குடும்பத்தினருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிய அரசு டாக்டர்.. மதுரையில் ஷாக்
மதுரை: மதுரையில் நிலத்தகராறு தொடர்பாக ஓய்வு பெற்ற வட்டாட்சியரை அரசு மருத்துவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. ஓய்வு பெற்ற வட்டாட்சியரான இவருக்கும் காயத்ரி என்ற அரசு மருத்துவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. நீண்ட காலமாக இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்த நிலையில், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் ஓய்வு பெற்ற வட்டாட்சியரான கருப்பையாவுக்கு ஆதரவாக அண்மையில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனால், தனது இடத்தை காலி செய்து தருமாறு காயத்ரியிடம் சுப்பையா கேட்டு இருக்கிறார். காயத்ரியின் தனியார் மருத்துவமனைக்கு சென்று கருப்பையா தனது நிலத்தை தருமாறு கேட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது காயத்ரிக்கும் கருப்பையாவுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு இருக்கிறது. வாக்கு வாதம் முற்றி மோதலாக வெடித்துள்ளது. ஒரு கட்டத்தில் அரசு மருத்துவர் காயத்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து கருப்பையாவை கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் கை, கால், தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் அடைந்து கருப்பையா வலியால் அலறி துடித்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக கருப்பையா அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். நிலத்தகராறில் ஓய்வு பெற்ற வட்டாட்சியரை அரசு மருத்துவர் ஒருவரே தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கத்தியால் வெட்டிய சம்பவம் மதுரை சுற்று வட்டாரப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications