மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

15அடின்னு சொல்லிட்டு, 40 அடி பள்ளம்.. இடிந்த சுவர்.. மீனாட்சி அம்மன் கோயில் அருகே விபரீதம்

Google Oneindia Tamil News

Recommended Video

    கார் பார்க்கிங் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டிய போது விபரீதம் -வீடியோ

    மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் அருகே கார் பார்க்கிங் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டிய போது 60 அடி நீள சுற்றுச்வர் இடித்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் வாகன நெரிசலை குறைக்க அடுக்குமாடி வாகனம் நிறுத்தம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

    Round wall collapse accident near Meenakshi Amman temple in Madurai

    இதற்காக 14 ஏக்கர் நிலத்தில், 40.19 கோடி மதிப்பீட்டில் கடந்த இரண்டு மாதமாக வேலை நடந்து வருகிறது.

    இந்த பகுதியின் அருகில் மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சுற்றி குடியிருப்புகள், தங்கும் விடுதிகள் உள்ளன, தற்போது அங்கு பார்க்கிங் கட்டிடம் கட்டுதவதற்கான பள்ளம் தோண்டும் பணிகள் நடந்துவருகிறது.

    Round wall collapse accident near Meenakshi Amman temple in Madurai

    அதில் 15 அடி மட்டும் தோண்டுவதாக கட்டுமான ஒப்பந்ததாரர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் 40 அடி வரை பள்ளம் தோண்டியதால், அதன் அருகே சாப்பாணி கோயில் தெருவில் இருந்த 60 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்தது. இதனை ண்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதமும் பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது. கட்டுமான பணியின்போது முறையான பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி பணியை தொடர வேண்டும் என்றும், அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் தடுக்க முடியும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English summary
    Round wall collapse accident By digging the groove, near Meenakshi Amman temple in Madurai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X