ஆபாசம்.. இப்படியுமா பேசுவாங்க.. ரவுடி பேபி சூர்யா மீது மதுரை கலெக்டரிடம் இந்து மக்கள் கட்சி புகார்
மதுரை: ரவுடி பேபி சூர்யா, சிக்கா சிக்கந்தர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இணையதளம் மூலமாக மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தி வருகின்ற வேலையில் அதனை கெடுக்கின்ற வகையிலும்,பெண்களை முக சுழிக்க வைக்கும் வகையிலும்,ஆபாசமாக தமிழ் சமுதாய நாகரீகத்தை சீரழிக்கும் வகையில் யூடியூப் மற்றும் இணையதளத்தில் ஆபாச காணொலி வெளியிடுவதாக அந்த புகார் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சி சார்பில் இந்த புகார் மனு இன்று வழங்கப்பட்டுள்ளது.

ஆபாச வீடியோ
ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா (எ) சிக்கந்தர் ஆகியோர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும்,சமூகவலைத்தலங்களில் ரவுடிபேபி சிக்கா பேசிய அறுவருக்கதக்க வீடியோக்களை தடை செய்யவும், ரவுடிபேபி சிக்கா இணையதளங்களை முடக்கவும் இந்து மக்கள் கட்சி தனது மனுவில் கோரியுள்ளது.

போராட்டம் நடத்துவதாக எச்சரிக்கை
தமிழக கலாசாரம் பண்பாட்டை சீரழிக்கும் வகையில், வியாபார நோக்கத்தோடு வேண்டுமென்று திட்டமிட்டு சமுதாய சீர்க்கேட்டை உண்டாக்கும் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா என்ற சிக்கந்தர் மீது நடவடிக்கை இல்லை எனில் மதுரை உள்பட தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் விரைவில் வலுபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் என்று இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

மதுரையில் துப்பாக்கி நடமாட்டம்
இதனிடையே, மதுரையில் துப்பாக்கி வைத்து மிரட்டி பணம் பறித்த பிரபல ரவுடியை கைது செய்த போலீசார் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்துள்ளனர். மதுரை மாநகர் சம்மட்டிபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சரத்குமார் என்பவர் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்துக்கு உட்பட்ட அரசரடி பகுதியில் நடந்து சென்ற ஹரிஹரசுதன் என்பவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி 1100ரூபாய் பணத்தை பறித்ததாக அளித்த புகாரின் பேரில், எஸ் எஸ் காலனி காவல்துறையினர் சரத்குமாரை கைது செய்து அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேறு குற்றங்கள்
இவர் துப்பாக்கியை வைத்து வேறு ஏதும் குற்றச் செயல்களில் ஈடுபட்டாரா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் பிரபல ரவுடியிடம் நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications