"சேட்டை பண்ணுனா சுடத்தான் செய்வாங்க”.. போலீசாருக்கு பாராட்டு பத்திரம் வாசித்த வரிச்சியூர் செல்வம்!
சென்னை: தற்போது திருந்தி வாழ்வதாக கூறி வரும் ரௌடி வரிச்சியூர் செல்வம் இன்று போலீசாருக்கு பாராட்டு பத்திரம் வாசித்துள்ளார். வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க கோவை போலீசார் தீவிரம் காட்டி வருவதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், அது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார் வரிச்சியூர் செல்வம்.
மதுரையை சேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வம், கோவைக்கு ஒரு கட்டப் பஞ்சாயத்துக்காக பயங்கர ஆயுதங்களுடன் வந்ததால் அவரை சுட்டுப் பிடிக்க கோவை போலீசார் உத்தரவிட்டதாக வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள தனது இல்லத்தில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "என்னை சுட்டுப் பிடிக்க கோவை போலீசார் உத்தரவிட்டுள்ளதாக பரவி வரும் செய்தி எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது. என்ன காரணம் என்றே தெரியவில்லை. நான் கோவை பக்கம் சென்றே 13 வருடங்கள் ஆகிறது. காவல்துறைக்கு கட்டுப்பட்டு நல்ல பிள்ளையாக வாழ்ந்து வருகிறேன். நான் எங்கே சென்றாலும் காவலர்களுக்கு, அதுகுறித்த தகவலை வாட்ஸ் அப்பில் அனுப்பி வருகிறேன். என்னை முழுவதுமாக காவல் துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
இப்போது நான் எந்த பிரச்சனைக்கும் போவது இல்லை. பேரன் பேத்திகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன். இப்போது உள்ள காவல்துறை தவறு செய்தால் விடுவது கிடையாது. தப்பு செய்தவர்களை விரட்டி சென்று பிடித்து காலை உடைப்பார்கள், காலில் சுடுவார்கள் இல்லையென்றால் சுட்டுவிடுவார்கள். சேட்டை செய்தால் போலீசார் சுட தான் செய்வார்கள். திருந்தினால் விட்டுவிடுவார்கள். நல்லவர்களை சுட்டால் கேள்வி கேட்கலாம். போலீஸ் சுடுவது எல்லாம் ரவுடி, திருடர்களைத்தான்.
மனிதர்களாய் இருக்கும் வரை நடவடிக்கை தேவை இல்லை. ஆனால் மிருகமாகிவிட்டால் அப்போது தண்டித்து தானே ஆக வேண்டும். தற்போது உள்ள ரவுடிகள் மனிதர்களாக இல்லை, மிருகங்கள் போல இருப்பதனால் தான் காவல்துறையினர் அவர்களை என்கவுண்டர் செய்கிறார்கள். கால் கையை உடைக்கிறார்கள். காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமிற்காக கையில் அரிவாள் வைத்து சுத்துவது, வாளால் கேக் வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அது போலீசுக்கு தெரிந்தால் கை கால்கள் உடைக்கப்படும். என் குடும்பம் பேரன், பேத்திகள் என தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு எதிரிகள் என்று யாருமே கிடையாது.
என் மீது பழைய வழக்குகள் மட்டுமே உள்ளன. நான் எந்த பிரச்சனைக்கும் செல்வது இல்லை. என் மீது ஒன்றும் காவல்துறை செய்யாத குற்றத்திற்கு வழக்கு போடவில்லை. செய்த தவறுக்கு தான் வழக்கு போட்டுள்ளார்கள். அதில் விசாரணை நடந்து வருகிறது. நீதிமன்றம் முடிவு செய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications