திருமங்கலத்தில் ரூ.30 லட்சம் பரிசுப்பொருட்கள் பறிமுதல்... அமைச்சர் ஆர் பி. உதயகுமார் விளக்கம்!
மதுரை: திருமங்கலத்தில் கப்பலூர் சிட்கோ சங்க நிர்வாக கட்டிடத்தில் சுமார் ரூ.30 லட்சம் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தேர்தலுக்கு முன்பாக அதிமுக தொழில்நுட்ப பிரிவை சார்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் ஆகியோருக்குகொடுப்பதற்காக வைத்திருந்த பரிசுப் பொருட்கள் என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் விளக்கம் அளித்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சிட்கோ சங்க நிர்வாக கட்டிடம் உள்ளது. அந்த கட்டடத்துக்குள் ஏராளமான வாளிகள், கம்ப்யூட்டர் உள்ளிட்டபல பரிசுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் அங்கு சென்றபோது வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஸ்டிக்கரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டிக்கரும் ஒட்டப்பட்ட வாளிகள் இருந்ததும், இதேபோல் அட்டை பெட்டியில் இருந்த எண்ணற்ற பொருட்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் ரூ.30 லட்சம் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக பரிசு பொருட்கள் வைத்திருந்த அறையை திறக்கும்படி அமமுக , திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரிசு பொருட்கள் குறித்து விளக்கம் அளித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், '' தேர்தல் அறிவிப்பிற்கு முன் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சார்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் ஆகியோருக்குகொடுப்பதற்காக வைத்திருந்த கணினி மற்றும் ஆடைகள் போன்ற பரிசுப் பொருட்கள் அம்மா கோவில் திறப்பு விழாவிற்கு வருகைதந்த பொதுமக்களுக்கும் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கும் வழங்குவதற்காக வைத்திருந்தது.

தேர்தல் நன்னடத்தை விதிமுறையின் காரணமாக பரிசுப் பொருட்களை குடோன் ஒன்றில் பாதுகாப்பாக வைத்திருந்தோம்" என தெரிவித்தார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications