யானைப்பாகன் குடும்பத்திற்கு சரவணன் எம்.எல்.ஏ. நிதியுதவி... நேரில் சந்தித்து ஆறுதல்
மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கோயில் யானைத் தாக்கி உயிரிழந்த காளிதாஸ் என்பவரது குடும்பத்திற்கு அந்த தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் நிதியுதவி வழங்கினார்.
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு கடந்த 2015-ம் வருடம் அஸ்ஸாமிலிருந்து தெய்வானை என்ற பெண் யானை வரவழைக்கப்பட்டது. 14 வயதுடைய அந்த யானையை வழக்கம்போல் யானை பாகனின் உதவியாளர் காளிதாஸ் நேற்று முன் தினம் குளிப்பாட்ட அழைத்துச்சென்றுள்ளார். அப்போது திடீரென்று காளிதாஸை யானை பலமாக தாக்கியதில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் காளிதாஸ் இல்லத்திற்கு இன்று நேரில் சென்ற திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன் நிதியுதவியும் வழங்கினார். மேலும் காளிதாஸின் 3 வயது மகள் யோகிதாவின் படிப்புச் செலவுக்காக சொந்த நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கினால் கடந்த 60 நாட்களாக யானையை ஒரே இடத்தில் சங்கிலியால் கட்டிப்போட்டதால், அது கோபம் அடைந்திருக்கக் கூடும் எனக் கூறும் சரவணன் எம்.எல்.ஏ., அதனை புத்துணர்வு முகாமிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும், இந்த யானையால் இதுவரை 4 பேர் தாக்கப்பட்டுள்ளதாக கூறும் அவர், வனத்துறையிடம் இதை ஒப்படைத்துவிட்டு வேரு யானையை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும் என கோரியுள்ளார்.

யானைத் தாக்கி உயிரிழந்த பாகன் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும், காளிதாஸின் மனைவி செவிலியருக்கு படித்திருப்பதால் அவருக்கு அரசு மருத்துவமனையில் செவிலியர் பணி தர வேண்டும் எனவும் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications