சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: ஸ்ரீதர் அப்ரூவராக மாற ஜெயராஜின் மனைவி, சிபிஐ எதிர்ப்பு
மதுரை: 2020 ஆம் ஆண்டில் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு இப்போது வரை நீதி கிடைக்கவில்லை. வழக்கில் முதல் குற்றம் சாட்டப்பட்டவராக உள்ள சாத்தான்குளம் காவல் நிலையம் ஆய்வராக இருந்த ஶ்ரீதர் திடீர் திருப்பமாக, தான் அப்ரூவராக மாறி அனைத்து உண்மைகளையும் சொல்கிறேன் என்று மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஸ்ரீதர் அப்ரூவராக மாற ஜெயராஜின் மனைவி மற்றும் சிபிஐ எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கொலை வழக்கு
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரின் மகன் பென்னிக்ஸ். தந்தை மகனாக இவர்களை கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி காவல்துறையினர் சட்ட விரோதமாக கைது செய்து, கஸ்டடியில் வைத்து தந்தை மகன் இருவரையும் கொடூரமாக தாக்கினர். இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையம் ஆய்வாளர் ஶ்ரீதர் உள்ளிட்ட 9 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடக்கத்தில் சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சம்பவம் நடைபெற்று கடந்த 5 வருடங்களாகியும் விசாரணை முடியவில்லை.
3 ஆண்டுகளாக..
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 3 வருடங்களாக நடைபெற்று வருகிறது. ஆய்வாளர் ஶ்ரீதுர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல் கட்டமாக சுமார் 2,000 பக்கங்களும், இரண்டாம் கட்டமாக 400 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிக்கையை சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. 105 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை
உயர் நீதிமன்ற மதுரை கிளை, 6 மாதங்களுக்குள் விசாரணை முடிக்க வேண்டும் என்று கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதமே மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றம் உத்தரவிட்டு சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போதுவரை விசாரணை நிறைவடையாதது ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆய்வாளர் ஸ்ரீதர்
இதற்கிடையே, சாத்தான்குளம் தந்தை, மகன் காவல் கொலை வழக்கில், ஆய்வாளர் ஶ்ரீதர் தான் முதல் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் திடீரென மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் ஶ்ரீதர், "அரசுத் தரப்பு சாட்சியாகி அனைத்து தகவல்களையும் சொல்ல விரும்புகிறேன். அப்ரூவராக மாறி அனைத்து காவலர்கள் செய்த செயல்களை கூற விரும்புகிறேன். மனசாட்சிக்கு கட்டுப்பாட்டு அனைத்து உண்மைகளையும் சொல்கிறேன். நேர்மையுடன் நீதிமன்றத்தில் உண்மையை சொல்ல விரும்புகிறேன்." என்று கூறியுள்ளார்.
ஜெயராஜின் மனைவி, சிபிஐ எதிர்ப்பு
இதுதொடர்பாக சிபிஐ பதிலளிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஸ்ரீதரின் மனு மீதான விசாரணை இன்று மதுரை மாவட்டம் முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில், பணிநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் நேரில் ஆஜரானார். சிபிஐ தரப்பு மற்றும் ஜெயராஜின் மனைவி செல்வராணி, அவரது மகள்கள், ரத்த சொந்தங்கள் ஆகியோர் ஸ்ரீதர் அப்ரூவராக மாறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். தனது எதிர்ப்பு வாதத்தை முன்வைத்து ஸ்ரீதர் அனுமதி கேட்ட நிலையில், சிறுது நேரம் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications