முஸ்லீம் பையனுக்கு இந்து பெண்.. பாஜக ஆபிசில் மணமுடித்து வைப்பார்களா? கேட்கிறார் நாம் தமிழர் சீமான்!
மதுரை : கம்யூனிஸ்ட், பாஜக கட்சி அலுவலகத்தில் வைத்து காதல் திருமணம் செய்வதாக அறிவித்திருக்கும் நிலையில், கட்சி ஆபீசை கல்யாண மண்டபமாக மாற்றி வருகிறார்கள் எனவும், பிஜேபி ஆபீஸில் இஸ்லாமிய ஆணுக்கும், இந்து பெண்ணுக்கும் திருமணம் முடித்து வைப்பார்களா? எனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் உயர்ந்த வகுப்பினருக்கும் தாழ்ந்த வகுப்பினருக்கும் திருமணம் நடக்க வைப்பார்களா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை ஆணையூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டார். திருமணத்தை நடத்து வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்," புதிய மசோதா அனைவருக்கும் பொருந்தும் என்று கூறுகிறார்கள். குஜராத் கலவரத்திற்கும் பாஜகவிற்கும் தொடர்பில்லை என்று கூறுகிறார். அதை நீங்கள் ஏற்க்கிறீர்களா?

ED ரைடு செய்வது எந்த கட்சியில்? எலக்ட்ரோல் பாண்டு அதிகம் பெற்றது எந்த கட்சி? முதல்வர் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்கிறார். முதலீடுகள் ஈர்க்க சென்றால் ஏற்கனவே ஈர்க்க சென்றது என்ன ஆனது? 2026 சட்டமன்ற தேர்தலில் தனியாகத் தான் நிற்பேன்.
கூட்டணி வைத்து ஏதாவது பிரச்சனையை இதுவரை சரி செய்து உள்ளார்களா? என்ன சாதித்துள்ளார்கள். முதல்வராக வந்தால் முதல் கையெழுத்து அரசு பள்ளி கல்லூரிகளில் படித்து வருபவர்களுக்கு அரசு வேலை என்பது தான். இது போல 100 கையெழுத்து போட்டு நாட்டின் தலை எழுத்தை மாற்ற வேண்டும் .
கம்யூனிஸ்ட், பாஜக கட்சி அலுவலகத்தில் வைத்து காதல் திருமணம் செய்வதாக அறிவித்திருக்கிறார்கள். கட்சி ஆபீசை கல்யாண மண்டபமாக மாற்றி வருகிறார்கள். பிஜேபி ஆபீஸில் இஸ்லாமிய ஆணையும் இந்து பெண்ணையும் திருமணம் முடித்து வைப்பார்களா ? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் உயர்ந்த வகுப்பினருக்கும் தாழ்ந்த வகுப்பினருக்கும் கல்யாணம் நடக்க வைப்பார்களா?" என்றார்.


Click it and Unblock the Notifications
