நாடகத்தில் நடிக்க விரும்பவில்லை.. தனியாக கர்ஜித்து செத்து போவேன்! நாம் தமிழர் கட்சி சீமான் உறுதி!
மதுரை: நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து கட்சி கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்; இதுபோன்ற தேர்தல் அரசியல் நாடகத்தில் நான் நடிக்க விரும்பவில்லை எனவும், கூட்டணி பேச்சுக்கே தற்போது இடமில்லை, நான் புலி சுதந்திரமாக வேட்டையாடி நினைத்ததை சாதிப்பேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிஉள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பொறுப்பாளர்கள் நியமனம் ஆலோசனைக் கூட்டம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னதாக சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது பேசிய அவர்," இன்றைக்கு மூக்கையாதேவரின் வரலாற்றை அடுத்த சந்ததியினருக்கு கடத்தாமல் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் மூன்று முதல்வர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தவர்.. கல்வி வள்ளலாக தன்னலமற்று பணியாற்றி வந்தவருக்கு இன்றைய தினம் அவருக்கு புகழ் போற்றுகின்றோம்.
கச்சத்தீவு குறித்து, அனைத்து குற்றங்களையும் செய்த நபர் கோவில் திருவிழாவில் கொட்டடித்ததும் சாமி ஆடி புனிதர் ஆவதை போன்று, தேர்தல் திருவிழாவின் போது கச்சத்தீவை கையில் எடுத்து கொள்கின்றனர். ஒன்றுக்கும் உதவாத இடம் என்று சொல்வோர்கள் இலங்கை எதற்காக அதை வைத்துள்ளனர். இந்திரா காந்தி கச்சத்தீவுக்கு பதிலாக பெற்ற இடம் என்னவாக இருக்கு. தான்தோன்றி தனமாக நிலத்தை கொடுத்துவிட்டு, வலையை உளர்த்துவது, இளைப்பாற இடம் என்பது பெயரளவில் போய்விட்டது. அதனை தொடர்ந்து வலுக்கட்டாயமாக ராஜீவ் காந்தியால் கையெழுத்திட பட்டது.
அன்றைக்கு தோள்பட்டையில் பாகிஸ்தான், சீனா அச்சுறுத்தலாக இருந்த போது, நாட்டின் பாதுகாப்புக்கு என கச்சத்தீவை கொடுத்துவிட்ட நிலையில், இன்றைக்கு இலங்கை முழுவதிலும் சீனா முழுமையாக பரவியுள்ளது. தேர்தலின் போது எங்கள் மீது பேரன்பு கொண்டு வருகின்றனர். இலங்கைக்கு பிரதமர் செல்கிறார், அங்க கச்சத்தீவை குறித்து பேசுவாரா..? இந்திய கட்சிகளை பொறுத்தவரையில் இரண்டு நிலைப்பாடுகள் என்பது இருக்கும்.. கர்நாடகாவில் காவேரிக்கு வேறு.
கச்சத்தீவுக்கு தீர்மானம் வெற்று தீர்மானம். பல தீர்மானங்கள் உறங்குகின்றது. அதேபோல் தான் இது. 4 ஆண்டுகாலத்தில் மீனவர்கள் பாதிக்கப்பட்டடு தான் வந்தார்கள் அதற்கு எதிராக மாநாடு, பேரணி நடத்த முடியுமா..! செய்தார்களா..? கச்சத்தீவு விடுங்கள், சுதந்திரமாக மீன் பிடிக்கும் உரிமையாவது உண்டா? மீனவர் சுட்டு கொல்லப்பட்டால் தமிழக மீனவன் என்று சொல்லும் போது இந்திய மீனவர்கள் சுட்டு கொலை செய்யப்பட்டனர் என்று சொல்ல தயாராக இருக்கிறார்களா? ஆனால் எங்கள் வரி, வாக்கு வேண்டும் ஆனால் எங்களுக்கு ஆதரவாக இருக்கவில்லை.
இலங்கை அகதியினருக்கு குடியுரிமை வழங்க இந்தியா தயாராகவில்லை. ஆனால் அயர்லாந்து போன்ற நாடுகள் குடியுரிமை வழங்கி கவுரவித்து வருகின்றனர். வக்பு வாரியம் திருத்த சட்டத்திற்கு கூட்டணி கட்சி சார்பில் ஆதரவு தான் வழங்குவார்கள். இந்திய நாட்டை அடிமையாக வைத்த இங்கிலாந்தினர் IPLல் விளையாட அனுமதி, ஆனால் பாகிஸ்தானுக்கு IPLல் விளையாட்டு தடை, இப்படியாக தான் அரசியல் நடைபெற்று வருகிறது.
வங்கதேசம், இலங்கையில் கிளர்ச்சி ஏற்பட்டது. மாநிலங்களை விட சிறிய நாடுகள் அவைகள். இந்திய பல்வேறு நாடுகளின் ஒருங்கிணைந்த நாடு தாங்காது. நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து கட்சி கூட்டணியில் பங்கேற்க மாட்டோம். அரசியல் நாடகத்தில் நான் நடிக்க விரும்பவில்லை. (கலைஞர் கருணாநிதி போன்று மிமிக்ரி செய்து அசத்தினார்.) கூட்டணி இல்லாமல் வெல்வதை விட சிறந்தக் கொள்கைக்கு ஆதரவாக 8 கோடி மக்கள் எங்களுடன் கூட்டணியில் உள்ளனர். ஒத்த சிந்தனை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கும்.
பணம் கொடுத்து வாக்கு பெறுவது ஊழலுக்கு வழிவகுக்கும் அதற்கு எதிரானவர்கள் நாங்கள். கூட்டணி எஜமானர்களுக்கு அடிபணிந்து சீட்டு கேட்பது எங்களுக்கு வேண்டாம். கூட்டணியில் எலியை இருப்பதை விட சிங்கமாய் தனித்து இருந்து கர்ஜித்து செத்து போவது மேல். நான் சிங்கமும் இல்லை நான் புலி சுதந்திரமாக வேட்டையாடி நினைத்ததை சாதிப்பேன்." என்றார்.
-
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications