“படிப்பு வரலைனா.. ஆடு, மாடு மேய்க்கத்தான் லாயக்கினு சொல்லாதீங்க!” - சீமான் ஆவேசம்
மதுரை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுரையில் நேற்று 'மேய்ச்சல் எங்கள் உரிமை' என்கிற பெயரில் ஆடு, மாடுகளை வைத்து மாநாட்டை நடத்தியிருந்தார். இதில் பேசிய அவர், "பசங்களுக்கு படிப்பு வரலைனா நல்லா சொல்லி கொடுங்க. அதை விட்டுட்டு ஆடு, மாடு மேய்க்கத்தான் லாயக்கினு சொன்னா என்ன அர்த்தம்? என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி நாதகவின் உழவர் பாசறை சார்பாக 'மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை' என்கிற பெயரில் மாநாடு மதுரை விராதனூர் பகுதியில் நேற்று நடத்தப்பட்டிருந்தது.

இதில் அவர் பேசியதாவது, "பள்ளிக்கூடத்தில் மாணவனுக்கு சரியாக வரவில்லை என்றால், ஆசிரியர் பெருமக்கள் நன்றாக சொல்லிக்கொடுங்க. அதற்குதானே ஊதியம். அதுதானே உங்கள் பணி. ஒருமுறை பதியவில்லை எனில், மறுமுறை சொல்லிக்கொடுங்கள். அப்போதும் பதியவில்லை என்றால் மூன்றாவது முறை, நான்காவது, சிறப்பு பயிற்சி வைத்து சொல்லிக்கொடுங்கள். அதை விட்டுவிட்டு, ஆடு, மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று சொல்கிறார்கள். ஆடு, மாடு மேய்ப்பது அவ்வளவு இழிவுகரமானதா?
ஆடு மாடு மேய்ப்பதை அவமானம் அல்ல வெகுமானம் என்பதை உணராத வரை, உன் நாடு பொருளாதாரத்தில் வளராது. என்ன புரிதல் இருக்கிறது உங்களுக்கு? அவ்வளவு அவமானம். ஆனால் வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆனால், கறிக்கடைக்கு போய் நின்று, அரைக்கிலோ கறி கொடுங்கள், எலும்பில்லாத கறியை கொடுங்கள் என்று கேட்கிறீர்கள். அத எந்த நாக்கு கேட்கிறது? எங்கிருந்து வரும்?
ஆட்டையும் மாட்டையும் எங்கள் ஆயர் குடி மேய்க்கவில்லை என்றால் கறியும், பாலும் எங்கிருந்து வரும்? ஆடு மாடு மேய்க்க சொல்கிறார்கள். அதென்ன அவ்வளவு அவமானமா? முல்லை நில கடவுள் திருமாலும் பெருமாலும், மாயோனும் மேய்த்தது ஆட்டையும் மாட்டையும்தான். ஆடு மாடுகளை கண்ணன் மேய்திருக்கிறார். இறை தூதர் நபிகள் நாயகம், இயேசு கூட ஆடு, மாடுகளை மேய்த்திருக்கிறார். ஆக ஆடு மாடு மேய்ப்பதை இழிவாக பேசும் நீங்கள் எங்களை அவனமானப்படுத்துகிறீர்களா அல்லது இறைவர்களை அவமானப்படுத்துகிறீர்களா?
ஆடு மாடு மேய்ப்பது அவ்வளவு இழிவானது எனில் பால், தயிர், நெய், வெண்ணெய், கறி ஆகியவற்றை திங்காதீர்கள். ஆடு மாடு மேய்ப்பது தொழில் அல்ல. அது எங்கள் வாழ்க்கை முறை, பண்பாடு, வாழ்வியலோடு இணைந்த கலாச்சாரம் அது" என்று கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications