செல்லூர் ராஜுவை காரில் ஏற்றாத எடப்பாடி.. என்ன நடந்தது?.. வெளியான விளக்கம்
மதுரை: மதுரைக்கு கடந்த வாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்திருந்த நிலையில், தன்னுடைய காரில் எடப்பாடி பழனிசாமி செல்லூர் ராஜுவை ஏற்ற மறுத்ததாக சோஷியல் மீடியாக்களில் வெளியான வீடியோ வைரலாகி இருந்தது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்தாரா என்பது குறித்து செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பொருள்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 30 ஆம் தேதி பார்வையிட்டார். இதற்காக மதுரைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, தனது காரில் செல்லூர் ராஜுவை ஏற்க மறுத்ததாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.

சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்த அந்த வீடியோவில், எடப்பாடி பழனிசாமி காரின் முன் பகுதியில் அமர்ந்திருக்கிறார். அப்போது, அங்கிருந்த செல்லூர் ராஜு காரில் ஏறுவதற்குத் தயாரானார். அவர் ஏறுவதைப் பார்த்த எடப்பாடி பழனிசாமி, வேண்டாம் வேண்டாம், வேறு காரில் செல்லுங்கள் என்று கூறுகிறார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜு மீது மிகுந்த அதிருப்பதியில் உள்ளதாகவும், அதனால் தான் தனது காரில் ஏற்ற மறுத்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு தன் மீது அதிருப்தி என்பதில் உண்மை இல்லை என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காகவே வேறு காரில் சென்றதாகவும் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளதாவது: எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்டு வந்த Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஒய் பிரிவில் இருந்து, Z பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு பாதுகாப்பு அதிகரித்துள்ளதான் காரணமாக, எடப்பாடி பழனிசாமி இருந்த காரில் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்தனர்.
அதனால் தான், தன்னை காரில் ஏற வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். வேறு காரில் வருமாறும் கூறினார். பாதுகாப்பு காரணங்களுக்காகவே வேறு காரில் சென்றேன் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications