மன்னார்குடி கலகலக்க! மதுரை ஜில்லா மனமணக்க! செந்தில்கணேஷ் -ராஜலட்சுமி கச்சேரி! அதிமுக தொண்டர்கள் Vibe
மதுரை: மதுரை அதிமுக மாநாட்டுத் திடலில் சோர்ந்து போய் அமர்ந்திருந்த தொண்டர்களை வைப் செய்ய வைக்கும் வகையில், செந்தில்கணேஷ் -ராஜலட்சுமி தம்பதியின் நாட்டுப்புற பாடல் கச்சேரி களை கட்டியது.
மதுரையில் காலை 8.30 மணியளவில் கொடியேற்றி வைத்து அதிமுக மாநாட்டை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்த நிலையில் கச்சேரி, சொற்பொழிவு என நான் ஸ்டாப் ஆக நடைபெற்று வருகிறது. அதிகாலையிலேயே மாநாட்டுக்கு கிளம்பியதால் மாநாட்டுப் பந்தலில் அமர்ந்திருந்த பலரும் மந்தமாக தூக்க கலக்கத்தில் காணப்பட்டனர்.

இதனால் அவர்களை வைப் செய்ய வைக்கும் வகையில், விஜய் டிவி புகழ் செந்தில்கணேஷ் -ராஜலட்சுமி தம்பதி நாட்டுப்புற பாடல்களை பாடத் தொடங்கியது. முதல் பாட்டாக மன்னார்குடி கலகலக்க.. மதுரை ஜில்லா மனமணக்க.. என்ற பாடலை பாட ஆரம்பித்தவுடன் மாநாட்டுத் திடலில் அமர்ந்திருந்த தொண்டர்கள் தலையை ஆட்டி டான்ஸ் போடத் டொடங்கினர்.
அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். பாடல்களை மற்றொரு இன்னிசைக் கச்சேரி குழு பாடியது. இதனால் அயர்ந்து போய் அமர்ந்திருந்தவர்கள் எனர்ஜி ஆனார்கள். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி பேச வந்தார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை காட்டிலும் எடப்பாடி பழனிசாமியை அவர் புகழோ புகழென புகழ்ந்து பேசினார்.
தலைவனும், தலைவியும் இல்லாத கட்சியை அண்ணனாக இருந்து வழிநடத்துவதாக ஐஸ் மழை பொழிந்தார். எழுதி எடுத்து வந்த பேப்பரை பார்த்து பேசியதையே மீண்டும் மீண்டும் கவிதை வாசிப்பது போல் பேசிக் கொண்டிருந்தார் வளர்மதி. அவரது பேச்சை அதிமுக தொண்டர்கள் பெரிதாக ரசிக்கவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications