ஜாதி பெயரை சொல்லுங்க.. உரிமையாளர் கேட்ட கேள்வி.. சட்டென வந்து விழுந்த பதில்.. ஜல்லிக்கட்டில் திக்
மதுரை: நேற்று பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் மாட்டின் உரிமையாளர் சிலர் ஜாதி பெயரை சொல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பாலமேடு ஜல்லிக்கட்டு நிர்வாக கமிட்டி அளித்த பதில் பெரிய வரவேற்பை பெற்றது.
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளை உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 7 முதல் மாலை 4 வரை நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டில் 1200 காளைகள் சீறிப்பாய்கின்றன. இதில் 700 மாடுபிடிவீரர்கள் பங்கேற்கின்றனர்.
பாலமேடு: உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடக்கம் முதல் இறுதி வரை சிறப்பாக நடந்தது. உயிரிழப்புகள் இன்றி சிறப்பாக நடந்தது.
நேற்று பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் மாட்டின் உரிமையாளர் சிலர் ஜாதி பெயரை சொல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பாலமேடு ஜல்லிக்கட்டு நிர்வாக கமிட்டி அளித்த பதில் பெரிய வரவேற்பை பெற்றது.
அதன்படி ஜாதி பெயரை சொல்லும்படி மாட்டின் உரிமையாளர் கேட்க.. விழாவில் கமெண்ட்ரி செய்த நபர்.. சொல்ல மாட்டோம், சொல்ல முடியாது, ஜாதி பெயரை சொல்ல முடியாது. தமிழ்நாடு அரசின் உத்தரவுப் படி நடக்கும் ஜல்லிக்கட்டு.. இதில் ஜாதி பெயரை சொல்லவே மாட்டோம் என்று பதிலடி கொடுத்தார்.
அவரின் அந்த சிறப்பான பதில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இத்தனை காலம் ஜல்லிக்கட்டில் ஜாதி அதிகம் இருந்த நிலையில் அப்படி இல்லாமல் நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
வரலாறு: ஜல்லிக்கட்டு தமிழ் பாரம்பரியத்தில் நீண்ட வரலாறு கொண்டது ஆகும். இது கிமு 400-100 முதல் நடைமுறையில் இருந்ததாக அறியப்படுகிறது. பண்டைய தமிழ்நாட்டின் 'முல்லை' பகுதியில் வாழ்ந்த ஆயர் பழங்குடியினர் மக்களிடையே இது ஒரு கலாச்சார சடங்கு. பின்னர், இது துணிச்சலை வெளிப்படுத்தும் தளமாக இந்த ஜல்லிக்கட்டு மாறியது.
போக போக இளைஞர்கள் இதில் பங்கேற்பதை ஊக்குவிப்பிற்காக பரிசுத் தொகை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறையை சித்தரிக்கும் சிந்து சமவெளி நாகரீகத்தின் முத்திரை, புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. மதுரை அருகே கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளைக் கயோலின் குகை ஓவியம், காளையைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் ஒரு தனி மனிதனைச் சித்தரிப்பது, சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் வரலாற்று ரீதியாகவும் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது உறுதியாகி உள்ளது. இதில் பாலமேடு ஜல்லிக்கட்டு பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.
வழக்கு: கடந்த வருடம்தான் ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட போட்டிகளுக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடுத்து இருந்தன . உச்ச நீதிமன்றத்தில் இந்த போட்டிக்கு எதிராக இவர்கள் தொடுத்த வழக்கு அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்து வந்தது. இதில் தமிழ்நாடு அரசு வென்றது.
தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, மாநில அரசு ஒன்று இது கலாச்சாரம் என்று சட்டம் இயற்றி உள்ளது. நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம். அதை நாங்கள் மாற்ற விரும்பவில்லை. அதனால் ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது.
தொன்மையான கலாச்சார ரீதியான விஷயங்களில் நாங்கள் தலையிட முடியாது என்று ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டமன்றத்தின் முடிவை, அதன் பார்வையை நாங்கள் எதிர்க்க மாட்டோம், மேலும் இது மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். தொன்மையான ஒரு கலாச்சாரம் இது என்று சட்டமன்றம் அவசர சட்டத்தில் முடிவு செய்துள்ளது. அவர்களின் சட்டத்தில் இது தமிழ்நாட்டு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிகட்டு போட்டி தமிழ்நாட்டின் பாரம்பரிய, கலாச்சாரம் என மாநில அரசு கருதினால் அதில் நீதிமன்றத்துக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அப்படி இருக்கும் போது தொன்மையான கலாச்சார ரீதியான விஷயங்களில் நாங்கள் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அந்த தீர்ப்பில் வென்ற நிலையில் இந்த வருடம் பிரச்சனை இன்றி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications